உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான கனடாவின் மாகாணங்கள் அந்த நாட்டில் வாழும் பழங்குடியின சமூகங்களின் பெயரிலேயே அமைந்திருக்கின்றன.
அங்குள்ள பழங்குடியினரில் ஆல்கோன்க்வியன் மொழி பேசுகிறவர்கள் (1,44,015), பேர்க்ரீ மொழி பேசுகிறவர்கள் (83,475), ஒஜிப்வே (19,275), இன்னு/மொண்டென்னியாஸ் (10,965) மற்றும் ஒஜி-க்ரீ (10,180), க்ரீ மொழிகளை தாய்மொழியாக உடையவர்கள் பெரும்பாலும் சாஸ்காட்செவான், மானிட்டோபா, அல்பர்டா அல்லது கியூபெக் ஆகிய இடங்களில் வாழ்ந்து வந்தனர்.
ஒஜிப்வே அல்லது ஒஜி-க்ரீ மொழியை தாய்மொழியாக உடையவர்கள் பெரும்பாலும் ஒன்டாரியோ அல்லது மானிட்டோபா ஆகிய இடங்களில் இருந்தனர். இந்நு/மொண்டென்னியாஸ் அல்லது அடிகாமெக் (5,915) ஆகிய தாய்மொழியை உடையவர்கள் பெரும்பாலும் கியூபெக்கில் வாழ்ந்தனர்.
மிக்கமாக்கை தாய்மொழியாக பேசும் மக்கள் (8,030), முன்செயின்லாந்து அல்லது நியூபிரன்ஸ்விக்கில் பெரும்பாலும் வாழ்ந்து வந்தனர், பிளாக்ஃபுட் மொழி பேசுகிறவர்கள் (3,250) பெரும்பாலும் அல்பர்டாவில் வாழ்ந்து வந்தனர். மேலும் இனுடிகிகுட், ஒஜிபவே, மிகமக், அடிகமெக்வ, மொடகனிசிஸ், உள்ளிட்ட 99 பழங்குடி மொழிகள் பேசும் மக்கள் அங்கு வாழ்கின்றனர். அங்கு பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் வாழ்கின்றனர். ஆங்கிலமும் பிரஞ்சும் அங்கு அதிகம் பேசும் மொழிகளாக கருதப்படுகிறது. அதே போல் தமிழும், பஞ்சாபியும், ஹிந்துஸ்தானியும் (ஹிந்தி அல்ல) பேசப்படுகிறது. போர்த்துக்கீஸிய மொழியான போஸ்க், மற்றும் சுவீடிஸ் உள்ளிட்ட மொழிகளைப் பேசும் மக்களும் கணிசமாக உள்ளனர்.
பல்வேறு தரப்பட்ட மக்கள் வாழ்ந்த போதிலும் ஆங்கிலமும், பிரெஞ்சும் அதிக முக்கியத்துவம் பெற்ற மொழிகளாக இருந்த போதிலும் பழங்குடி இனத்தினரின் மொழிகளுக்கு தனிக்கவனம் செலுத்தி அதற்காக தடையில்லாத நிதி சட்டத்தை பிறப்பித்து அதன் மூலம் அந்த மொழிகள் எந்த வகையிலும் அழிந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளனர்.
1950களில் அடிகாமெக் பேசும் மக்கள் மிகவும் சொற்ப எண்ணிக்கையில் இருந்தனர். மனிட்டோபாவின் புறநகரில் உள்ள ஒரு கிராமத்தில் சில வீடுகளில் உள்ள முதியவர்கள் மட்டுமே இந்த மொழி பேசினர். அந்த முதியவர்கள் இறந்துவிட்டால் அந்த மொழி அழிந்துவிடும் என்று ஆபத்தை உணர்ந்துகொண்ட அரசு உடனடியாக செயல்பட்டு அந்த மொழி பேசும் சொற்ப முதியவர்களை (ஒரு முதிய வயது பெண், முதிய வயது ஆண்கள்) ஒருங்கிணைத்து வானொலி ஒன்றை உருவாக்கி அவர்களை தொடர்ந்து கலை கலாச்சாரம், உணவு முறை, வாழ்க்கை முறை என பலவற்றை தொடர்ந்து பேசவைத்தது. அதனை ஒலிநாடாக்களில் பதிவு செய்து அந்த மொழியை மறந்துபோன இதர பகுதிகளில் தொடர்ந்து ஒளிபரப்பியது.
இதன் விளைவாக அந்த மொழியை மறந்துபோன மக்கள் மீண்டும் அந்த மொழியைப் பேசத்துவங்கினர். இதன் மூலம் இன்று அடிகாமெக் பேசும் மக்கள் 6,000 பேர் வரை எண்ணிக்கை கூடியுள்ளது. இதன் மூலம் மொழிக்காக கனடா அரசு எவ்வளவு அக்கறையோடு செயல்படுகிறது என்பது தெரியவரும். அம்மண்ணின் மைந்தர்களின் தாய் மொழிகளின் எதிர்காலம் ஒளியமயாக உள்ளது. கனடா அரசாங்கத்தின் ஆதரவுடன், இந்த மொழிகள் தொடர்ந்து செழித்து வளரும்.
கனடாவின் பழங்குடி மொழிகள் நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு விலைமதிப்பற்ற பகுதியாகும். இந்த மொழிகளைப் பாதுகாப்பதன் மூலம், நாம் பழங்குடி மக்களின் கலாச்சாரத்தையும் அடையாளத்தையும் பாதுகாக்கிறோம்.