சந்தி சிரிக்கும் ஆபாச பக்தி கும்பமேளாவில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து விற்பனையாம்

1 Min Read

பிரபாயக்ராஜ், பிப்.21 உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி தொடங்கியது. 45 நாட்கள் நடைபெறும் இந்த விழாவானது வரும் 26-ஆம் தேதி மகா சிவராத்திரியை ஒட்டி நிறைவு பெறுகிறது. உ.பி. அரசாங்க புள்ளி விவரங்களின்படி இதுவரை 50 கோடிக்கும் அதிகமான மக்கள் மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் நீராடியுள்ளனர்.

வீடியோ

இதனிடையே மகா கும்பமேளாவில் பெண்கள் குளித்து உடை மாற்றும் ஒளிப்படங்கள் மற்றும் காட்சிப் பதிவுகள் (வீடியோ) இணையத்தில் விற்கப்படும் அதிர்ச்சி உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டெலிகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங் களில் இயங்கும் கும்பல்கள், இந்த காட்சிப் பதிவுகளை விற்பனை செய்து வருகிறது.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ள நிலையில், மகா கும்பமேளாவில் பெண்களின் கவுரவத்தைப் பாதுகாக்க பாஜக அரசு தவறிவிட்டது. இது மிகவும் அநாகரீகமான மற்றும் உணர்ச்சிகரமான சர்ச்சைக்குரிய விடயம் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆளும் பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சித்து இருந்தார்.காட்சிப் பதிவுகள் தொடர்பாக பலரும் தங்க ளது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

வழக்குப் பதிவு

இந்த நிலையில், மகா கும்பமேளாவில் பெண்கள் குளித்து உடை மாற்றும் ஒளிப்படங்கள் மற்றும் காட்சிப் பதிவுகளை வெளியிட்டு விற்பனை செய்தததாக இரண்டு சமூக ஊடகங்கள் மீது உ.பி. காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
மேலும், காட்சிப் பதிவு களை வெளியிட்டதாக கூறப்படும் இன்ஸ்டாகிராம் கணக்கு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ் டாகிராமை கையாளும் நபர் குறித்து மெட்டாவிடம் தகவல் கோரியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *