கடவுள் கொடுக்கிறார் என்று கூறிக்கொண்டு கடவுளை வணங்குவது வெறும் வேடம், முட்டாள்தனம் அல்லாமல் வேறு என்ன? முதலாளி என்பவன் மூட்டை அடிக்கிறான்; எனவே அவன் கடவுள் கொடுத்தார் என்று கூறி மக்கள் தன் மேல் ஆத்திரப்படாமல் இருக்கக் கடவுளை வணங்குகிறான். இல்லையா? தொழிலாளியாகிய உனக்கு நாளைக்குச் சோற்றுக்கு வழி உண்டா? கடவுள் இருக்குமானால் கடவுள் நம்பிக்கை உள்ள உன்னைத் தொழிலாளியாக, மறுவேளை சோற்றுக்கு வழியில்லாதனாக உண்டாக்கியிருக்குமா? சோற்றுக்கு நிறைய வகை இருப்பவனுக்கு மேலும் பணம் கொடுக்குமா?
– தந்தை பெரியார், 
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1572)
			
			Leave a Comment
	
