23.2.2025 அன்று மாவட்டத் தலைநகரங்களில் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து நடைபெறவுள்ள ஆர்ப்பாட்ட முழக்கங்கள்

1 Min Read

வாழ்க வாழ்க வாழ்கவே!
தந்தை பெரியார் வாழ்கவே!

வாழ்க வாழ்க வாழ்கவே
அன்னை மணியம்மையார் வாழ்கவே!

வாழ்க வாழ்க வாழ்கவே
தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்கவே!

வாழ்க வாழ்க வாழ்கவே
இந்தி எதிர்ப்புப் போராளிகள்
வாழ்க வாழ்க வாழ்கவே!

கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்!
இந்தியைத் திணிக்கும் பாஜக அரசைக்
கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்!

திணிக்காதே திணிக்காதே!
இந்தியையும் சமஸ்கிருதத்தையும்
திணிக்காதே திணிக்காதே!

ஏற்கமாட்டோம் ஏற்கமாட்டோம்!
மும்மொழிக் கொள்கையை ஏற்கமாட்டோம்!

திணிக்காதே திணிக்காதே!
தேசியக் கல்விக் கொள்கையை
திணிக்காதே திணிக்காதே!

அனுமதியோம் அனுமதியோம்!
ஒன்றிய அரசின் ஹிந்தி திணிப்பை
அனுமதியோம் அனுமதியோம்!

இந்திதிணிப்புப் போராலே
சமஸ்கிருதத் திணிப்புப் பேராலே
படையெடுப்பா, படையெடுப்பா
பண்பாட்டுப் படையெடுப்பா?
பார்ப்பனப் பண்பாட்டுப்
படையெடுப்பா? படையெடுப்பா?

கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்!
தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய
கல்வி நிதியைத் தர மறுக்கும்
ஒன்றிய அரசைக் கண்டிக்கிறோம்!

மிரட்டாதே மிரட்டாதே!
ஒன்றிய அரசே மிரட்டாதே!
மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால்
நிதி இல்லை என்று மிரட்டாதே!

பணியாது பணியாது!
தமிழ்நாடு பணியாது
பெரியார் மண் பணியாது!
திராவிட மண் பணியாது!

கை வைக்காதே கை வைக்காதே!
இருமொழிக் கொள்கையில் கை வைக்காதே!

சிதைக்காதே சிதைக்காதே!
இந்தியாவின் ஒற்றுமையை
சிதைக்காதே சிதைக்காதே!

அனுமதியோம் அனுமதியோம்!
காவி கார்ப்பரேட் பாசிசத்தின்
ஹிந்தி திணிப்பை அனுமதியோம்!

எங்கள் மக்கள் வரிப்பணத்தை
எங்களுக்குத் திருப்பித் தர
மறுப்பதா? மறுப்பதா?

எதிர்ப்போம் எதிர்ப்போம்!
ஹிந்தி திணிப்பை எந்த நாளும்
எதிர்ப்போம் எதிர்ப்போம்!

போராடுவோம் வெற்றி பெறுவோம்
வெற்றி கிட்டும் வரை போராடுவோம்l

– திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *