குவைத் நாட்டில் தொழிலதிபராக இருந்த டில்லிபாட்சா தனது 70ஆவது வயதில் மறைந்தார். பல்வேறு ஏழை எளிய மக்களுக்கு குவைத்தில் தன் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை வழங்கி சுயமரியாதையோடு வாழ வழி வகுத்தவர்.
இவரது சொந்த ஊரான எதுமலை, திருச்சி, பெரம்பலூர், நாமக்கல் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் குவைத் செல்ல வழிகாட்டியவர். திருச்சி – குவைத் நேரடி விமான சேவையை உருவாக்கிட காரணமானவர். ‘தமிழ்நாடு முஸ்லிம் பேரவை’ என்ற முதல் சங்கத்தை குவைத் நாட்டில் உருவாக்கியவர். அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மறைவு

Leave a Comment