புதுச்சேரி மாநில புதிய நீதி கட்சியின் மாநிலத் தலைவரும், புதுவை அமுதசுரபி மேனாள் தலைவருமான
எஸ்.பொன்னுரங்கம் (வயது 80) உடல் நலக் குறைவால் மறைவுற்றார் (19.2.2025) என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
சீரிய பகுத்தறிவாளர்.
மறைந்த சமூகநீதிப் போராளி – பெரியார் பற்றாளர். எப்போதும் தந்தை பெரியாரிடமும், நம்மிடமும் மிகுந்த பற்று கொண்டவர்.
அவருக்கு ரேணுகா, ராதிகா, சுகந்தி ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர்.
அவரது மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங் கலையும், குடும்பத்தாருக்கு மிகுந்த ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
19.2.2025
சென்னை
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்