ஒன்றிய கல்வி அமைச்சருக்கு ஆதித்தமிழர் பேரவை இரா.அதியமான் கண்டனம்!
சென்னை, பிப்.20 புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழித் திட்டத்தை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்திக் கொண்டால் மட்டுமே ஒன்றிய அரசு தன் நிதியை விடுவிக்கும் என மிரட்டல் தொனியில் கூறியிருக்கும் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிர தானை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது என ஆதித் தமிழர் பேரவைத் தலைவர் இரா. அதியமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
எந்தவொரு சமூகமும் முன்னேற் றம் அடைய கல்வி என்பது மிக மிக அவசியமான பேராயுதமாக இருக்கிறது.
திராவிட மாடல் என்பது கல்விக்கு முக்கி யத்துவம் கொடுத்து இரு மொழிக் கொள்கை மூலம் பகுத்தறி வால் செதுக்கி உயர் கல்வியில் மற்ற மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழகம் தான் முன்னோடியாக சிறந்து விளங்குகிறது என்று தேசியதர வரிசைப் பட்டியல் வெளிக் காட்டியுள்ளது.
ஆனால் பா.ஜ.க. ஒன்றிய அரசு கல்வி விசயத்தில் அறிவியலையும் அறிவையும் வளர்த் துக் கொள்ள தயாராக இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக கல்வியில் மும்மொழித் திட்டம் மற்றும் புதிய கல்விக் கொள்கை மூலம் திரிபு வர லாற்றை திணித்து புராண இதி காச குப்பைகளை பாடத்திட் டங்களில் சேர்க்கும் படியான மோசடி செயல்களை அரங் கேற்றவும் இதன் மூலம் இந் தியை” வலிய திணிக்க முற்படுகிறது.
புதிய கல்விக் கொள்கை
இந்நிலையில் பா.ஜ.க. ஒன் றிய அமைச்சர் தர்மேந்திர பிர தான் அவர்களிடம் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை எப் போது ? வழங்குவீர்கள் என பத்திரிக்கையாளர்கள் கேட்ட தற்கு மு ம்மொழித் திட்டத்தையும் புதிய கல்விக் கொள்கையையும் ஏற்றுக் கொண்டால்தான் நிதி வாங்கு வோம் இல்லையென்றால் தர முடியாது என்று அடாவடி யாக கூறியிருக்கிறார் ஒன்றிய அமைச் சர். இந்தி மொழியை தமிழர்கள் கற்றால் தான் நிதி வழங்குவோம் என்று கூறுவது பச்சை அயோக்கியத்தனம். இதை ஏற்றுக் கொண்டால் தான் நிதி தருவோம் இல்லை யென்றால் தரமாட்டோம்
என்று கூறுவது கூட்டாச்சி தத் துவத்திற்கு எதிரானது. தமிழ் நாட்டை வஞ்சிப்பதோடு மிரட்டிப் பார்க்கும் செயல் . அங்கிகரிக்கப்பட்ட 22 தேசிய மொழிக்கும் முக்கியத் துவம் கொடுக்க வேண்டிய அமைச் சர் இந்திக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் அமைச்சரின் பதில் எப்படி நியாயம் ஆகும்?
வரி கொடா இயக்கம்
இது தமிழ் மக்களை கொந்த ளிக்கச் செய்திருக்கிறது. ஒன்றிய அமைச்சர் கூறும் இந்தப் பதில் ஒன்றிய அரசின் பா.ச.க. குரல்தான் தொடர்ந்து இது போன்று தமிழ்நாட்டை வஞ்சிப் பார்களேயானால் தமிழர்கள் நாங்கள் ஒன்றிய அரசுக்கு எதி ராக “வரி கொடா இயக்க” த்தை தொடங்கக் கூடிய நிலைக்கு தள்ள வேண்டாம்-
இவ்வாறு இரா.அதியமான் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.