மும்மொழிக் கொள்கை அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி எதிர்ப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கிருஷ்ணகிரி, பிப்.20 மும்மொழிக் கொள் கையை அதிமுக எந்த சூழ்நிலையிலும் ஏற்காது என்று அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி தெரிவித் துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட் டம் ஊத்தங்கரை பகுதியில் அ.தி.மு.க. சார்பில் பூத்கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அப்போது கே.பி.முனுசாமி செய்தியா ளர்களிடம் கூறியதாவது:-

கண்டிக்கத்தக்கது

அமெரிக்காவில் இருக் கின்ற சட்டவிரோதமாக குடியேறியதாக இந்திய மக்களை வெளி யேற்றுகின்றபோது, கை, கால்கள் கட்டப்பட்டு அனுப்பப்பட்டதாக செய்தி வந்ததும் உடனடி யாக இந்திய அரசு பதில் சொல்லி இருக்க வேண்டும்.

குறிப்பாக வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் சங்கர் பதில் சொல்லி இருக்க வேண்டும், ஒன்றிய அரசின் வெளியுறவு துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். அமெரிக்க விஷயத்தில் பிர தமர் மோடி கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். கார்ட்டூன் வெளி யிட்டதற்காக இணைய தளத்தை முடக்கு கிறார்கள் என்றால் அது அவர்களது சர்வாதி காரத்தை வெளி காட்டுகிறது.
தமிழ்நாடு தேசிய கல்வி கொள்கையை முழுமையாக ஏற்று கொண்டால்தான் தமிழ் நாட்டுக்கு முழுமையான நிதி ஒன்றிய அரசிடம் இருந்து கிடைக்கும் என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதற்கு ஹிந்தி பேசாத மாநிலங்களை முழு வதையும் மிரட்டுகின்ற வகையில் கூறியிருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அ.தி.மு.க. கொள்கை வேறு, மற்ற கட்சிகள் கொள்கை வேறு, அ.தி.மு.க. மதச்சார்பற்ற கொள்கை உடையது. அனைத்து மதங்களையும் ஒரு முகமாக பார்க்கின்ற கட்சி, எங்கள் தலைமை ஏற்றுக்கொண்டு யார் வருகிறார்களோ அவர் களோடு நல்ல முறையில் வலுவான கூட்டணி அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *