காரைக்கால், பிப்.20 இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி, ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்து, காரைக்காலில் கடைய டைப்புப் போராட்டம் நடந்தது.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால், கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், கடந்த 26ஆம் தேதி கோடியக்கரை பகுதியில் மீன் பிடித்துக ்கொண்டிருந்தனர்.அப்போது, இலங்கை கடற்படையினர் துப் பாக்கிச் சூடு நடத்தி, அவர்களை கைது செய்தனர்.இதில் 9 மீனவர்கள் விடுவிக்கப் பட்ட நிலையில், மேலும் 4 மீனவர்களை மீட்டு கொண்டுவர ஒன்றிய, மாநில அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, காரைக்காலில் கடந்த 11ஆம் தேதி முதல், மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
8ஆவது நாளாக, இலங்கை கடற்படை மற்றும் ஒன்றிய, மாநில அரசை கண்டித்து, காரைக்கால் மாவட்டம் முழுதும் கடை அடைப்பு போராட்டம் நடந்தது.அரசு பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டது. பள்ளி, கல்லுாரிகள் வழக்கம் போல் இயங் கின. ஆட்டோ, கார், தனியார் பேருந்துகள் இயங்கவில்லை.பிர தான சாலைகளில் இருந்த அனைத்துக் கடை களும் மாலை வரை மூடப் பட்டிருந்தது.
இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட் டது. முக்கிய சந்திப்புகளில் காவல்துறையினர் பாது காப்பு பணியில் ஈடுபட் டனர்.