சென்னை, பிப். 19- பெரியார் சிலையை அவமதித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் ஜாமீன் தள்ளுபடி – ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கடந்த 3ஆம் தேதி சென்னை ஜாபர்கான்பேட்டை, கங்கை அம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள பெரியார் சிலையை, செருப்பு மாலை அணிவித்து அவமதித்ததாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி அஜய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சிறையில் உள்ள அஜய் ஜாமீன் கோரி சென்னை சைதாப்பேட்டை 23ஆவது பெருநகர நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந் தார்.
மனு நேற்று விசாரணைக்கு வந்தது, அப்போது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி சைதாப்பேட்டை 23ஆவது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் இடையீட்டு ( Intervene Petition) மனு தாக்கல் செய்து ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜாமீன் (பிணை) மனுவை தள்ளுபடி செய்தார்.