கல்வி, வேலை வாய்ப்பு தொழில் வளர்ச்சி பொது சுகாதாரம் பணப் புழக்கம் கிராமங்கள் வரை ஊடுருவியுள்ள மின்சார இணைப்பு மற்றும் தார் சாலைகள் பொது போக்குவரத்து வசதி. உள்கட்டமைப்பு என அத்தனை அம்சங்களிலும் இந்தியாவின் முதல் மாநிலமாகவோ அல்லது முதல் மூன்று இடங்களுக்குள் உள்ள மாநிலமாகவோ தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது அப்படி இருக்க..
இதன் படிப்படியான வளர்ச்சி களை பற்றிப் பேச வேண்டிய ஊட கங்கள் ஊடக ஜாம்பவான்கள். முகநூல் கருத்து சொல்லிகள், சமூக ஆர்வலர்கள் ஒவ்வொரு வரும் காந்தி சுட்டிக் காட்டிய மூன்று பொம்மைக் குரங்களைப் போல
‘‘எதையும் பார்க்காமலும்…
எதையும் பேசாமலும்..
எதையும் கேட்காமலும்…’’
இருந்து விடுகின்றனர்.
ஆனால், பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு திரைப்பட நாயகன் அரசியலுக்கு வருகிறேன் என அறிக்கை விட்ட அடுத்த நிமிடமே ஓடி வந்து கருத்து சொல்ல ஆரம்பித்து, தமிழ்நாட்டு மக்களின் தலையில் பிம்ப அரசியலை கட்டி விட துடிக்கிறீர்களே அது ஏன்?
உங்களை எல்லாம் யார் இயக்கு கிறார்கள் அல்லது யாருடைய ஏவல் களுக்காக நீங்கள் வேலை செய்து வருகிறீர்கள்?
தமிழ் நாட்டில் நடந்து வரும் கடந்த அறுபது ஆண்டு கால சமூக மாற்றத்தின் பலன்களை நீங்களும் தானே அணு.அணுவாக அனுபவித்து வருகிறீர்கள்? அப்படி இருக்க அதற்கான நன்றி விசுவாசம் கொஞ்சம் கூட உங்களுக்கு இருக் காதா? மனசாட்சி உறுத்தாதா?
வறிய மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நடிகர் சோற்றுப் பொட்டலம் கொடுப்பதை சிலாகித் துப் பேசும் நீங்கள் இந்த மாநில மக்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கித் தந்து மக்களை சொந்த காலில் நிற்க வைக்கப் போராடிய சுடந்த கால ஆட்சியாளர்களைப் பற்றியோ அல்லது சமகால ஆட் சியாளர்களைப் பற்றியோ ஒரே ஒரு முறை கூட பாராட்டிப் பேசுவ தில்லையே! அது ஏன் ? எது உங்களை தடுக்கிறது?
சமூக மாற்றத்தை உருவாக்கிய திராவிட மாடல் அரசுகளைப் பற்றிப் பேசினால் உங்களுடைய நடுநிலை பிம்பம் சிதறிப் போய் விடும் என நவ பார்ப்பனியம் உங்களை அச்சுறுத்தி வைத்துள்ளது. அதற்கு பயந்து கொண்டு, நீங்களும் அதன் உளவியல் அடிமைகளாக மூலையில் முடங்கிப் போய் விட்டீர்கள். ஆனால், இது போன்ற திரைப்பட நாயகர்கள் வெற்றுச் சவடால் அடிக்கும் போது அதற்கு ஆயிரம் அர்த்தங்களை கற்பிக்க ஓடோடி வருகிறீர்களே!
இது உங்களுக்கே வெட்கமாக இல்லையா?
– வண்ணப்பலகை (4.2.2025)