வர்த்தகப் போரை தொடங்கிய டிரம்ப் இந்தியாவிற்கு வரப்போகும் சிக்கல் சோஹோ சிறீதர் வேம்பு எச்சரிக்கை!

1 Min Read

சென்னை,பிப்.19- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு காரணமாக இந்தியாவில் பொருட்களின் விலை தற்காலிகமாக உயரும் வாய்ப்புகள் இருப்பதாக சோஹோ நிறுவனர் சிறீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

டிரம்ப்பின் வரி விதிப்பு காரணமாக பின்வரும் மாற்றங்கள் ஏற்படும் என்று சோஹோ நிறுவனர் சிறீதர் வேம்பு தெரிவித்துள்ளார். அதன்படி நாம் அமெரிக்காவிற்கு மென்பொருட்கள் சேவைகளை ஏற்றுமதி செய்கிறோம். சீனாவில் இருந்து சரக்கு பொருட்களை இறக்குமதி செய்கிறோம். இப்போது அமெரிக்காவின் வரி விதிப்பால்.. இந்தியா இருதரப்பு வர்த்தகத்தை சமப்படுத்த அமெரிக்காவிலிருந்து அதிக அய்போன்கள், ஜிபியுக்கள், எல்பிஜி, அணுமின் நிலைய சேவைகள், போர் விமானங்கள், விஸ்கி போன்றவற்றை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

அதே சமயம் நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகரிக்காமல் இருக்க, சீனாவில் இருந்து நுகர்வோர் பொருட்களை இறக்குமதி செய்வதை குறைப்பதற்கான வழிகளை இந்தியா கண்டுபிடிக்க வேண்டும், அதாவது உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இது ஒரே இரவில் நடக்க முடியாது என்பதால், குறுகிய காலத்தில் இறக்குமதி செய்யப்படும் நுகர்வோர் பொருட்களின் விலைகள் உயரக்கூடும். இது பணவீக்கமாக உருவெடுக்கும், என்று சோஹோ நிறுவனர் சிறீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *