13.7.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
👉பொது சிவில் சட்டம், ஹிந்துக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ஏ.அய்.எம்.அய்.எம். கட்சி ஓவைசி கருத்து.
👉பெங்களூருவில் நடக்க உள்ள 2ஆவது ஒற்றுமை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு 24 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் மேனாள் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். இதில், 17ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு சோனியா காந்தி இரவு விருந்து அளிக்கிறார்.
டெக்கான் கிரானிக்கல், சென்னை
👉 தமிழ்நாட்டில் அரசியல் குழப்பம் விளைவிக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி மதிமுக கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறது
இந்தியன் எக்ஸ்பிரஸ்
👉ஹிந்துத்வாவை முன்னிறுத்தியதை தவிர்த்து எந்த வித பொருளாதார முன்னேற்றம், நிறுவனங்களின் தனித்தன்மை, புதிய அணுகுமுறைகள் எதையும் செய்யாத நிலையில் பாஜக 2024 பொதுத் தேர்தலை சந்திக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் பானு பிரதாப் மேத்தா.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
👉 யூனிபார்ம் சிவில் கோட் (யுசிசி) நடைமுறைப் படுத்துவது கலாச்சார பன்முகத்தன்மை, மத சுதந்திரம் மற்றும் பாலின சமத்துவம் ஆகியவற்றின் கொள்கைகளை நீர்த்துப் போகச் செய்யும் என நாட்டை காப்போம் (தேசத்தைக் காப்பாற்றுங்கள்) கன்வீனர் சி.ஜே.ராஜன் இந்திய சட்ட ஆணையத்துக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தி டெலிகிராப்
👉 ஜூன் மாதத்தில் சில்லறை பணவீக்கம் மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு 4.81 சதவீதமாக உயர்ந்துள்ளது
டைம்ஸ் ஆப் இந்தியா
👉 எங்களுக்கு தேவை ஒரே ஜாதி எனும் சட்டம் தான், பொது சிவில் சட்டம் அல்ல, சட்ட ஆணையத்துக்கு திமுக கடிதம்.
– குடந்தை கருணா