தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க மறுக்கும் ஒன்றிய அமைச்சரைக் கண்டித்து

1 Min Read

ஓரிரு நாட்களில் பட்டினிப் போர்
அனைத்து தொழிற்கல்வி பயிற்றுநர்கள் அறிவிப்பு

ராசிபுரம்,பிப்.18- தமிழ்நாட்டிற்கான நிதியை ஒதுக்க நிபந்தனை விதிக்கும் ஒன்றிய அமைச்சரை கண்டித்து, பட்டினிப் போர் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்து தொழிற்கல்வி பயிற்றுநர்கள் முடிவு செய்துள்ளனர்.

அதிருப்தி
ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்றால் தான், தமிழ் நாட்டிற்கு விடுவிக்க வேண்டிய நிதி வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இது கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித் துள்ளனர். இந்நிலையில், ஒன்றிய அமைச்சரின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக நிதியை வழங்க வலியுறுத்தியும், தொழிற்கல்வி பயிற்றுநர்கள் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து தொழிற்கல்வி பயிற்றுநர் ஒருங்கிணைப்பு நிர்வாகிகள் கூறியதாவது: ஒரு மாநிலத்தில் கல்வி திட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பது, அந்த மாநிலத்தின் உரிமை மற்றும் விருப்பம் சார்ந்தது.
ஒன்றிய அரசு வேண்டு மானால், அவர்களின் கருத்ைத கூறலாம். ஆனால், நாங்கள் கொண்டு வரும் திட்டத்தை கட்டாயம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்று கூறக் கூடாது.

அதிலும் புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே, ரூ.2,150 கோடி கல்வி நிதியை விடுவிப்போம் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் அறிவித்திருப்பது மிகவும் அபத்தமானது. இந்த நேரத்தில், தமிழ்நாடு அரசுடன் இணைந்து அனைத்து ஆசிரியர் பெருமக்களும் கண்டனத்தை பதிவு செய்யவேண்டும். பள்ளிக் கல்வித் துறைக்கான நிதியை ஒதுக்காததால், மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

இந்த வகையில் தமிழ்நாடு அரசு மேல் நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப் பிரிவில் பயிலும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் பாதிக்கப்படுவர்.
451 தொழிற்கல்வி பயிற்றுநர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். இதை கருத்தில் கொண்டு நிதியை ஒதுக்க வேண்டும்.
இதற்கான நீதி கேட்டு, விரைவில் பட்டினிப் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இதற்கான தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *