18.2.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ராஜீவ்குமார் இன்று ஓய்வு – புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம்: ஒன்றிய சட்ட அமைச்சகம் அறிவிப்பு. நாளை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வருகிறது. இது வெறும் 48 மணிநேரம் தான். புதிய தலைமை தேர்தல் ஆணையர் தேர்வை அதுவரை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி குறிப்பு அனுப்பியதாக தகவல்.
* ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம்.
* இந்தியா கூட்டாட்சி நாடு; மாநிலங்களுக்கு நிதி தர முடியாது என ஒன்றிய அரசு கூற முடியாது, கனிமொழி, எம்.பி. காட்டம்.
* மும்மொழி கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும் என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சு ஆணவத்தின் உச்சம் என்கிறார் ப.சிதம்பரம்.
* மோடியின் பத்தாண்டு ஆட்சியில் அவர்களின் காவி சித்தாந்தத்தை நிறைவேற்ற பாடுபடும் வேளையில், சீனா தொழில் நுட்பத்தில் உலகின் முன்னணி நாடாக வளர்ந்து விட்டது என்கிறார் எழுத்தாளர் ஆகார் படேல்.
தி இந்து:
* ஞாயிற்றுக்கிழமை அமிர்தசரஸில் தரையிறங்கிய அமெரிக்க இராணுவ விமானத்தில் அனுப்பப்பட்ட 112 பேர் கொண்ட குழுவில் 33 பேர் குஜராத்திகள்; குஜராத்திற்கு நாடு கடத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 74அய் எட்டுகிறது.
* ஒன்றிய அரசின் சமக்ர சிக்ஷா நிதி என்பது ஒரு கட்சி பிரச்சினை அல்ல, ஒரு மாநில பிரச்சினை என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேச்சு.
* கும்பமேளா ‘புனித’ நீரில் மலக் கழிவு: பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவின் போது மக்கள் புனித நீராடிய நதி நீரில் அதிக அளவு மல கோலிஃபார்ம் (மனிதர் மற்றும் விலங்குகளின் கழிவுகளிலிருந்து வரும் நுண்ணுயிரிகள்) காணப்பட்டதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் (NGT) சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி டெலிகிராப்:
* கும்பமேளாவிற்கு இத்தனை கோடி மக்கள் செல்கிறார்கள் என கணக்கிடும் அரசால், கூட்ட நெரிசலில் பலியானவர்களின் எண்ணிக்கையை ஏன் கூற முடியவில்லை? என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் கேள்வி.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* மகாராஷ்டிராவில் பாஜக-சேனா மோதல் தீவிரம். 20க்கும் மேற்பட்ட ஷிண்டே எம்எல்ஏக்களின் பாதுகாப்பைக் குறைத்தது பட்னாவிஸ் தலைமையிலான பாஜக ஆட்சி
.- குடந்தை கருணா