சிதம்பரத்தில் 15.02.2025 அன்று நடை பெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க 14- தீர்மானங்களும் சிதம்பரத்தின் சீல மாகும்.
‘மருத்துவ முதுகலை பட்டப்படிப்பு களில் இருப்பிடத்தை அடிப்படையாகக் கொண்ட இட ஒதுக்கீடு அனுமதிக்க தக்கது அல்ல’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம் வரும் ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் 1200-க்கும் மேற்பட்ட இடங்கள் பறிபோகும் அபாயம் உருவாகி இருக்கிறது. இந்த தீர்ப்புக்கு எதிராக அனைத்து சமூக நீதி அமைப்புகளும் ஒன்றுபட்டு போராட முன்வரவேண்டும் என்று பொதுக்குழு வலியுறுத்துகிறது.
பல்கலைக்கழகங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் நிர்வாக ரீதியான கட்டளையை யு.ஜி.சி எனப்படும், பல்கலைக் கழக நிதி நல்கைக் குழு பிறப் பிக்க முடியாது – இது அரசமைப்புச் சட்டத் திற்கு எதிரானது. அவற்றை திரும்பப்பெற வேண்டும்.
சிதம்பரத்தில் இருக்கும் நடராஜர் கோவில் தீட்சதர்களின் உடைமையில்லை. 10-ஆம் நூற்றாண்டில் சோழ அரசர்களால் கட்டப்பட்டது. இது தனிப்பட்ட யாருக்கும் சொந்தமானதல்ல, என்று நீதிமன்ற தீர்ப்பே உள்ளது. குறிப்பிட்ட தீட்சிதர் குடும்பங் களின் கட்டுப்பாட்டில் கோவிலை வைத்துள்ளனர். கோவிலை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.
கோவில் தெற்கு வாசல் பாதை வழியாகக் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த நந்தன் நுழைந்தார் என்று. அந்த வாயிலை இன்றளவும் அடைத்து வைத்துள்ளார்கள். இது அரசின் தீண்டாமை ஒழிப்புச் சட்டத்திற்கு எதிரான செயல். இந்த நுழைவு வாயிலைத் திறந்திட அரசு ஆவன செய்யுபடி பொதுக்குழு வலியுறுத்துகிறது.
பழனி முருகன் கோவில் அர்ச்சகர்களாக மீண்டும் பண்டாரத்தார்களை நியமனம் செய்ய வேண்டும். அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டத்தின்படி, முதற்கட்டமாக அர்ச்சகர்கள் தமிழ்நாடு அரசால் நியமனம் செய்யப்பட்டனர் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப் படையில் மற்ற மற்ற கோவில்களிலும் அர்ச் சர்களை நியமனம் செய்யுமாறு தமிழ்நாடு அரசை பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தமிழர்களின் அரசியல் சார்ந்த உரிமைகளுக்கும். சுயமரியாதையை மீட்டெடுக்கும் சமூகம் சார்ந்த உரிமை களுக்கும் குரல்கொடுத்து நிறைவேற்றப் பட்டுள்ளன திராவிடர் கழக சிதம்பரம் பொதுக்குழு தீர்மானங்கள். பொதுக்குழு தீர்மானங்கள் செயல்வடிவம் பெற கழகத் தொண்டர்களுக்கு ஆசிரியர் அவர்கள் வகுத்துக் கொடுத்த வழிமுறையும். வழிகாட்டுதல் உரையும் தலைமைப் பண்பின் தனித்துவம் மிக்கது.
– செந்துறை மதியழகன்