மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (17.02.2025) சென்னை, பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 55ஆவது ஆண்டு விழாவினை முன்னிட்டு அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவியர்கள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி விழா பேருரையாற்றினார். இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையர் பிரவின் குமார், மண்டலக் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.