வைகோவின் கடுமையான முயற்சியால் புதுடில்லியில்
பெரியார் மய்யம் கூடுதல் இட வசதியுடன் மீண்டும் திறக்கப்பட்டது
சென்னை, பிப்.17 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலக்கிய அணி ஏற்பாட்டில் திராவிட இயக்க போர்வாள் வைகோ அவர்களின் அரசியலில் – அறம் அகவை அறுபது நூல் வெளியிட்டு விழா நேற்று (16-02-2025) மாலை குரோம்பேட்டை, லெட்சுமி ஆண்டாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக ம.தி.மு.கஅவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூன்ராஜ் தலைமையில் கவியரங்கமும், வெளியிட்டு விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் மதிமுக இலக்கிய அணி செயலாளர் அவிநாசி சி.பெருமாள் வரவேற்று உரையாற்றினார். மதிமுக இலக்கிய அணி செயலாளர் காரை எஸ்.செல்வராஜ் தலைமையுரையில் தந்தை பெரியாரின் தொண்டினால் நான் நின்று உரையாற்றுகிறேன் என்று குறிப்பிட்டார். வைகோ அரசியலில் – அறம் அகவை அறுபது நூலினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் பெற்றுக் கொண்டார்.
தமிழர் தலைவர் வாழ்த்துரை
எமதருமைச் சகோதரர் வைகோ அவர்களின் 60 ஆண்டுகால அரசியல் பொதுவாழ்க்கை குறித்து கவிதை நூலினை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
வைகோ 60 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் எத்தனையோ சான்று கூறாலம். தமிழர்களின் நலனுக்காகவும், உரிமைகாகவும் தொடர்ந்து மக்கள் மன்றத் திலும், நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து பேசகூடியவர். அவர் சந்திக்காத போராட்ட களம் இல்லை, அவர் சந்தித்த இன்னல்கள் ஏராளம் இருக்கிறது.
டில்லியில் பெரியார் மய்யம் இடிக்கப்பட்ட போது கொதித்து எழுந்தார். அவரின் கடுமையான முயற்சியால் பெரியார் மய்யம் கூடுதல் இட வசதியுடன் மீண்டும் திறக்கப்பட்டது அதற்கு வைகோ அவர்களின் தொண்டு முக்கியமானதாகும்.
நாட்டில் நடைபெற்று வரக்கூடிய பா.ஜ.க.ஆட்சியால் நம்முடைய மொழி, பண்பாட்டை சீர்குலைக்க முயற்சிகள் நடை பெற்று வருகிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் அப்பொழுது தான் வைகோ போன்ற போர்வாள் பட்டை தீட்டப்பட்டு சமுதாயத்திற்கு தொண்டாற்ற வருவார்கள் என்றும் நல்ல உடல்நலத்துடன் நூற்றாண்டு கண்டு வாழ வேண்டுமென வாழ்த்துரையில் குறிப்பிட்டார்.
பல்லாவரம் தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் இ.கருணாநிதி, பொறியாளர் மு.செந்தி லதிபன், ஆ.வந்தியத்தேவன், லயன் மா.வை.மகேந்திரன், சி.பி.எம். மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், சிறீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கல்லூரி முதல்வர் முனைவர் ச.திருநாவுக்கரசு, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் எம்.யாக்கூப், துரை, வசந்தராசன், உள்ளிட்ட தமிழ் புலவர்கள், கவிஞர்கள், அனைத்துக் கட்சித் தோழர்கள் கலந்துக் கொண்டனர்.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் திராவிட இயக்க போர்வாள் வைகோ மற்றும் மதிமுக இலக்கிய அணி செயலாளர் காரை எஸ்.செல்வராஜ் ஆகி யோருக்கு பயனாடை அணிவித்து தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
முன்னதாக தாம்பரம் மாவட்ட கழக தலைவர் ப.முத்தையன், மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன், கரைமா நகர் சு.யாழினி, மாவட்டத் தொழிலாளரணி தலைவர் மா.குணசேகரன், மாவட்ட இளைஞரணி தலைவர் தி.இர.சிவசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் கரைமா நகர் தே.சுரேஷ், பி.சி. ஜெயராமன், தாம்பரம் சு.மோகன்ராஜ், மு. திருமலை,தி.தீபக், சோழிங்கநல்லூர் மணிகண்டன், மாடம்பாக்கம் அ.கருப்பையா, தனசேகர், கிழக்கு தாம்பரம் குமார், ராஜேந்திரன், மதிவாணன், கணேஷ், ஆவடி மாவட்ட துணைத் தலைவர் உடுமலை வடிவேல் மற்றும் கேம்ப் ரோட் இராகுல் ஆகியோர் பங்கேற்றனர். கழகத் தலைவரை வரவேற்ற போது ‘விடுதலை வளர்ச்சி’ நிதி ரூ.1000த்தை மாவட்ட தலைவர் ப.முத்தையன் வழங்கினார்.