கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 17.2.2025

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மும்மொழி கொள்கையை ஏற்கும் வரை நிதி கிடையாது என்பதா? ஒன்றிய அரசு பிளாக்மெயில் செய்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையை கட்டாய மாக்குகிறது? என ஒன்றிய கல்வி அமைச்சரால் கூற முடியுமா? எனக் கேள்வி.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு அதிமுக மேனாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி, விசிக தலைவர் திருமாவளவன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்.
* பஞ்சாயத்து நிர்வாகத்தில் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டு முன்னிலை வகிக்கிறது, ஒன்றிய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் அறிக்கையில் பாராட்டு.
* கும்பமேளாவுக்கு செல்லும் மக்கள் டில்லி ரயில் மேடையில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானதற்கு ரயில்வே துறையின் நிர்வாக திறமையின்மையே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு. ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என வற்புறுத்தல்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ராகுல் காந்தியின் ‘சமூக நீதி’ என்ற கூற்றின் எதிரொலியாக, காங்கிரஸ் அகில இந்திய கமிட்டியில் புதிய பொறுப்பாளர்கள், அய்ந்து பேர் ஓபிசி பிரிவினர். எஸ்.சி., எஸ்.டி., இஸ்லாமியர் தலா ஒருவர், முன்னேறிய ஜாதியில் இருந்து மூன்று பேர் என நியமனம்;
* கும்பமேளாவே தேவையற்றது; டில்லி கூட்ட நெரிசல் தவறான நிர்வாகம் தான் காரணம், என லாலு பிரசாத் குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
* பீகார் ஜாதிவாரி சர்வே: பஞ்சாயத்து வாரியாகவோ அல்லது மாவட்ட வாரியாகவோ தரவு இல்லை: முசாபர்பூரைச் சேர்ந்த அமரேந்திர குமார் என்பவர் ஆர்டிஅய் (தகவல் அறியும் உரிமை) மூலம் கேட்ட கேள்விக்கு மாநில அரசு பதில்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா அளித்து வந்த 21 மில்லியன் டாலர் (ரூ.180 கோடி) நிதியை ரத்து செய்து எலான் மஸ்க் நேற்று அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

.- குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *