கடலூர் மாவட்டத் தமிழ்ச் சங்கத் தமிழர் திருநாள் விருது வழங்கும் விழா 7.2.2025 அன்று பெரியார் கல்லூரி அரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார். பிரவீன் அய்யப்பன், மருதவாணன், கோமதி, இளமாறன் ஆகியோர் விருது வழங்கப்பட்டு சிறப்பிக்கப் பெற்றனர். பேராசிரியர் குழந்தைவேலனார் தலைமை வகித்தார். விழா ஏற்பாடுகளைப் பேராசிரியர் இராசா, குறிஞ்சி ந.இரவி மற்றும் பொறுப்பாளர்கள் செய்து சிறப்பித்தனர்.