ஊற்றங்கரை, பிப். 16- ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் பெரியார் எனும் பெரு நெருப்பு” எனும் சிறப்பு கருத்தரங் கம் 11/02/2025 அன்று காலை 10 மணியளவில் ஊற்றங்கரை ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில் வெகு சிறப்புடன் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு திராவிடர் கழகத்தின் மாவட்ட இணை செயலாளர் சீனிமுத்து.இராஜேசன் வரவேற்புரை நிகழ்த்த சட்டக் கல்லூரி மாணவி பெ.விண்ணரசி தொடக்க உரையாற்றி தொடங்கி வைத்தார். கிருட்டிணகிரி மாவட்ட கழக செயலாளர் செ.பொன்முடி தலைமை தாங்கினார்.
கிருட்டிணகிரி மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிடமணி, அரூர் மாவட்ட கழகத் தலைவர் அ.தமிழ் செல்வன் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயலாளர் பழ.வெங்கடாசலம் திருப்பத்தூர் மாவட்ட கழகத் தலை வர் கே.சி.எழிலரசன் ஆகியோர் உணர்வுபூர்வமான உரையை நிகழ்த் தினர். கவிஞர் இ.சாகுல் அமீது சிறப் புரையாற்றினார்
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் மாதாந்திர புரவலராக இணைத்துக் கொண்ட தணிக்கையாளர் லோகநாதன் சேகர் “இந்தியா அன்றும் –இன்றும்” என்கிற நூலை எழுதிய எழுத்தாளர் நாராயணசாமி நிகழ்வில் தனது பிறந்த நாளை கொண்டாடிய அரூர் மாவட்ட கழகத் தலைவர் அ.தமிழ் செல்வன் ஆகியோருக்கு ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட கழகத் தலைவர் கே.சி.எழிலரசன் சிறப்பு செய்தார்.
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் செயலாளர் பழ.பிரபு நிகழ்ச்சியினை ஒருங்கிணைக்க ஊற்றங்கரை ஒன்றிய கழக செயலாளர் செ.சிவராஜ் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது. நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.பங்கேற்ற அனைவரும் தொடர்ந்து விடுதலை வாசகர் வட்டம் இது போன்ற கருத்தரங்குகளை நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.