சென்னை, ஜூலை 14 – மேயர்கள், நக ராட்சி, பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதம் தோறும் மதிப்பூதியம் வழங்க முதல் – அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இதன்படி மேயர்களுக்கு மாதம் ரூ.30 ஆயி ரமும், நகராட்சி தலைவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரமும் கிடைக்கும். தமிழ்நாட்டில் மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங் கப்பட்டு வருகிறது.
பிரதமரில் தொடங்கி மாநில முதலமைச்சர்கள்,ஒன்றிய அமைச் சர்கள், மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப் பினர்கள் இந்தப் பட்டியலில் வருகிறார்கள். அதன்படி, நாடாளு மன்ற உறுப்பினர்கள் ரூ.1 லட்சமும் (ஏனைய படிகள் தனி), சட்டமன்ற உறுப்பினர்கள் ரூ.1.05 லட்சமும் (படிகள் சேர்த்து) மாதந்தோறும் மதிப்பூதியமாக பெற்று வருகின்ற னர். ஆனால், மாநகராட்சி மேயர் கள், துணை மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி களின் தலை வர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கு மாத ஊதி யம் வழங்கப்படுவது கிடையாது. அவர்களும் தங்களுக்கு மாதந்தோ றும் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என்று கடந்த ஓராண்டுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையைபரிசீலித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கும் மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க உத்தரவிட்டுள் ளார். இது தொடர்பாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் டி.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது:-
மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்கள், துணைத்தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் தாங்கள் முழுநேர மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளதால், தங்களுக்கு மாதம்தோறும் மதிப் பூதியம் வழங்க வேண்டும் என 13.4.2022 அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை பரிசீலித்த முதலமைச்சர், மாந கராட்சி மேயர் உள்ளிட்டவர்களின் மக்கள் நல பணிகளை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு மாதந்தோ றும் மதிப்பூதியம் வழங்க ஆணையிட்டுள்ளார். இதன்படி, மாநக ராட்சி மேயர்களுக்கு மாதம் தோறும் ரூ.30 ஆயிரம், துணை மேயர்களுக்கு ரூ.15 ஆயிரம், கவுன் சிலர்களுக்கு ரூ.10 ஆயிரம் மதிப் பூதியம் வழங்கப்படும். இதே போன்று, நகராட்சி தலைவர்க ளுக்கு ரூ.15 ஆயிரம், துணைத் தலைவர்களுக்கு ரூ.10 ஆயிரம், கவுன்சிலர்களுக்கு ரூ.5 ஆயிரமும், பேரூராட்சி தலைவர்களுக்கு ரூ.10 ஆயிரம், துணைத் தலைவர்களுக்கு ரூ.5 ஆயிரம், கவுன்சிலர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500-ம் மதிப்பூதியமாக வழங்கப்படும். இந்த மதிப்பூதியம் இந்த மாதம் (ஜூலை) முதல் வழங்கப்படும். இந்த நடவடிக்கை, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களின் நிர்வாக திறனை வலுப்படுத் துவதற்கு அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்துள் ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் 21 மாநக ராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் இருக்கின்றன. இதன்படி, 21 மேயர்கள், 21 துணை மேயர்கள், 1,374 மாநகராட்சி கவுன்சிலர்கள், 138 நகராட்சி தலை வர்கள், 138 துணைத் தலைவர்கள், 3,843 நகராட்சி கவுன்சிலர்கள், 490 பேரூராட்சி தலைவர்கள், 490 துணைத்தலைவர்கள், 7,621 பேரூ ராட்சி கவுன்சிலர்கள் இருக்கின் றனர். இவர்கள் அனைவருக்கும் இனி மாதந்தோறும் மதிப்பூதியம் கிடைக்கும்.
அதே நேரத்தில், ஊராட்சி தலைவர்களுக்கு மாதந் தோறும் ரூ.2 ஆயிரம் மதிப்பூதியம் வழங் கப்படுகிறது. ஆனால், ஊராட்சி கவுன்சிலர்களுக்கு மதிப் பூதியம் கிடையாது. கூட்டம் நடக் கும் நாட்களில் ரூ.250 படியாக வழங் கப்பட்டு வருகிறது.