சென்னை ஜூலை 14 – சென்னை தீவுத்திடலில் 30 ஏக்கர் நிலப் பரப்பில் ரூ.50 கோடி மதிப்பில் இயற்கை வனப்புடன் கூடிய நகர்ப் புற பொதுச் சதுக்கம் அமைப்பது குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைவருமான பி.கே. சேகர்பாபு, சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் (12.7.2023) அன்று நேரில் சென்று கள ஆய்வு செய்தனர். அப்போது, அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களி டம் கூறியது:
சென்னை தீவுத்திடலில் இயற்கை வனப்புடன் நகர்ப்புற பொதுச் சதுக் கம் அமைக்கப்படக் கூடிய சாத்தி யக்கூறுகளை ஆராய்ந்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து சிஎம்டிஏ, சுற்றுலாத் துறை இணைந்து வெகுவிரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்படும்.
சென்னை தீவுத் திடலில் கூவ மாற்றின் இருபுறமும் உள்ள 30 ஏக்கர் நிலப்பரப்பில் உலகத் தரத்தில் கண்காட்சிகள், பொழுது போக்கு அம்சங்கள், தங்கும் விடுதி கள் உள்ளிட்ட பல்வேறு வசதிக ளுடன் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் நகர்ப்புற சதுக்கம் அமைக்கப்படவுள்ளது.
இந்தப் பணிகள் முழுமை பெற்றப் பிறகு பெருமளவில் சென்னை மாநகர மக்களுக்கும், வெளி மாநில, மாவட்ட சுற்றுலா பயணிகளுக்கும் பயன்படுகின்ற வகையில் இந்தப் பகுதி அமையும்.
வடசென்னை ரூ.1,000 கோடி மதிப்பில் 3 ஆண்டுகளில் மேம்படுத் தப்படும் என அறிவிக்கப்பட்டி ருந்தது. இந்தத் திட்டமும் வட சென்னையின் முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக எடுத்துக்கொண்டு சிறந்த பொழுதுபோக்கு அம்சங்க ளுடன் கூடிய ஒரு அரங்கமாக இதை ஏற்படுத்த திட்டமிடப்பட் டுள்ளது என்றார் அவர்.
ஆய்வின் போது, சுற்றுலா, பண் பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் க.மணி வாசன், வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செய லர் அபூர்வா, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, சுற்று லாத் துறை இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, சிஎம்டிஏ முதன்மை செயல் அலுவலர் கவிதா ராமு, தலைமைத் திட்ட அமைப்பா ளர்கள், சுற்றுலா, வருவாய் உள்ளிட்ட துறை அலுவலர்கள் உடனி ருந்தனர்.