பூமியை மய்யமாகக் கொண்டே அனைத்து கோள்களும் சுற்றிக்கொண்டு இருக்கின்றன. சூரியனும் ஒரு கோள் தான் என்று பஞ்சாங்கம் கூறிக்கொண்டு அதையே நம்பிக்கொண்டு இருந்த காலகட்டத்தில் பூமி உள்பட எல்லாக் கோள்களும், சூரியனைச் சுற்றி வருகின்றன என்ற உண்மையைக் கண்டறிந்து 1616-ஆம் ஆண்டில் உலகிற்கு தெரியப்படுத்தியவர் ‘கலிலியோ கலிலி’ (Galileo Galilei).
கலிலியோ, இத்தாலி நாட்டின் ‘பைஸா’ (Pisa) நகரத்தில் பிறந்தார். கணிதப் பேராசிரியரான அவர், இயற்பியல், வானவியலில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். கலிலியோ ‘வானவியல் அறிவியலின் தந்தை’, ‘நவீன இயற்பியலின் தந்தை’ என்றெல்லாம் புகழப்பட்டார்.
வானியல் ஆய்வுகளுக்குப் பயன்படுகிற தொலை நோக்கியை (டெலஸ்கோப் – Telescope) முதன் முதலில் கண்டுபிடித்தார். தொலைநோக்கியின் உதவியோடு வியாழனின் துணைக்கோள்களை அனைவருக்கும் காட்டினார். பால்வீதி (Milky Way) என்பது பல கோடி விண்மீன்களின் கூட்டம் என்பதை கலிலியோ நிரூபித்தார். அய்ரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலத்தில் கலிலியோவின் கண்டுபிடிப்புகள் மிக முக்கியமான மாற்றங்களை நிகழ்த்தின.
சூரியனை, பூமி உள்ளிட்ட கோள்கள் சுற்றிவருகின்றன என்று சொன்ன நிக்கோலஸ் கோபர்நிகஸ் (Nicolaus Copernicus) கூற்றை கலிலியோ ஆதரித்து ஆய்வுக் கட்டுரை எழுதினார்.
கலிலியோ தனது கண்டுபிடிப்புகள் அனைத்தையும் ‘உரையாடல்’ என்ற தலைப்பில் எழுதி புத்தகமாக வெளியிட்டார். அந்தப் புத்தகத்தில் மூன்று கற்பனைக் கதாபாத்திரங்கள் பேசிக் கொள்வது போல எழுதினார். ஒரு கதாபாத்திரம் கலிலியோவின் கண்டுபிடிப்புகளைப் பற்றி அறிவுபூர்வமாகப் பேசும். அடுத்த கதாபாத்திரம் அதை முட்டாள்தனமாக எதிர்க்கும். மூன்றாவது கதாபாத்திரம் திறந்த மனதுடன் அவற்றைப் பரிசீலிக்கும்
கலிலியோ தொலைநோக்கி பற்றிய தகவல்கள்
1609இல் 3x உருப்பெருக்கல் கொண்ட தொலை நோக்கியை உருவாக்கினார். அதன் பிறகு 30x உருப்பெருக் கல் வரை கொண்ட தொலைநோக்கிகளை உருவாக்கினார்.
தனது சொந்த லென்ஸ்களை அரைத்து மெருகூட்டுவது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டார். அவரது தொலை நோக்கிகள் அவற்றின் உயர் தரத்திற்காக அறியப்பட்டன.
இந்நாள் – அந்நாள் (15.2.1564)கலிலியோ கலிலி (Galileo Galilei) பிறந்த நாள்

Leave a Comment