திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள ‘பெரியார் உலகம்’ பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.periyarworld.org என்ற வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வலைதளத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். ‘பெரியார் உலக’ப் பணிகளை தொடர்ந்து சிறப்பாக செய்து வரும் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களுக்கு திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்டத்தில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பாராட்டுகளை தெரிவித்தார்.