தமிழர் தலைவர்
அவர்களுக்கு மூவேந்தர் முன்னேற்றக்
கழகத் தலைவர் சிறீதர்
வாண்டையார் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
பொதுக்குழுவில்…
திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டம் சிதம்பரத்தில் இன்று (15.02.2025) காலை சரியாக 10.30 மணி அளவில் ஜி.எம். வாண்டையார் திருமண மண்டபத்தில் தொடங்கியது.
தொடக்கத்தில் கடவுள் மறுப்பினை காஞ்சி பா.கதிரவன் கூறினார். சிறப்பு வாய்ந்த பொதுக்குழுக் கூட்டத்தினை நடத்துவதற்கு வாய்ப்பளித்த கழகத்தின் தலைவருக்கு நன்றி தெரிவித்தும், பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து வருகை தந்த அனைவரையும் வரவேற்றும் சிதம்பரம் மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி. இளங்கோவன் வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து கழகத்தின் செயலவைத் தலைவர்
வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி தலைமையேற்று உரையாற்றினார்.
பொதுக்குழுக் கூட்டத்தின் நோக்கத்தினை திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் எடுத்துக் கூறி பல்வேறு ஆலோசனைகளை கழக பொறுப்பாளர்களுக்கு வழங்கி தொடக்க உரை ஆற்றினார்.
கடந்த பொதுக்குழு கூட்டத்திலிருந்து இன்று காலை கூடிய பொதுக்குழுக் கூட்டம் வரை கழகத்தின் கடந்த கால செயல்பாடு களைக் குறித்தும், கழகத் தலைவரின் லட்சியப் பணியாக கருதி செயல்பாட்டுக்கு வரக்கூடிய ‘பெரியார் உலகம்’ மாபெரும் திட்டத்தினை காணொலிக் காட்சிகளாக ஒளிபரப்பி திட்டத்தின் நோக்கங்களை விரிவாக எடுத்துக்கூறியும் உரையாற்றினார் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ்.
பொதுக்குழு கூட்டத்தில் 14 தீர்மானங்களை கழகத்தின் பொறுப்பாளர்கள் வாசித்தனர். அதனைத் தொடர்ந்து கழகத் தோழர்கள் கருத்துரை ஆற்றினார்கள். நிறைவாக கழகத் தலைவர் அவர்கள் பொதுக்குழுவின் நோக்கம் குறித்தும், முக்கிய திட்ட அறிக்கை குறித்தும் நிறைவு உரையாற்றினார்.
கூட்டத்தின் நிறைவாக சிதம்பரம் மாவட்ட கழக செயலாளர் சி. யாழ். திலீபன் நன்றி கூறினார்.
தமிழ்நாடு முழுவதுமிருந்தும் அனைத்து மாவட்ட கழகப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
![திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்டம் [சிதம்பரம், 15.2.2025] திராவிடர் கழகம்](https://viduthalai.in/wp-content/uploads/2025/02/12-23-1024x502.jpg)
திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.