அமெரிக்க அரசின் அதிகாரவர்க்கத்தில் உள்ளவர்களை கைக்குள் போட்டுக்கொண்டு தற்போது மீண்டும் ஒரு விளையாட்டை பார்ப்பனர்கள் துவங்கி உள்ளனர்.
முன்பு தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு வேலைக்காக இடம் பெயர்ந்த தமிழர்களை ஹிந்துத்துவ அமைப்புகள் அடித்துத் துரத்திய பின்னணியில் பார்ப்பனக் கூட்டம் இருந்ததாக மும்பை தமிழர்கள் இன்றும் பேசிக்கொள்வார்கள்.
காரணம் அன்று தாக்கப்பட்ட தமிழர்கள் அனைவருமே தாராவி என்னும் குடிசைப்பகுதியில் இருந்தவர்கள். அதற்கு அருகே மாதுங்கா என்ற பகுதியில் வசிக்கும் தமிழ் பார்ப்பனர்கள், அங்கும் கோவில்களை ஆக்கிரமித்து தங்களுக்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சந்தியாவந்தனம், பூஜை புணஸ்காரம் செய்து செய்துகொண்டு வசதியாக உழைக்காமலேயே வயிறு வளர்த்து வந்தனர். சிங்கப்பூர், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளில் ஏற்கெனவே தமிழர்கள் கோலோச்சியதால் அங்கே பிழைக்கச் சென்ற பார்ப்பனர்களுக்கு தமிழர்களை ஒட்டியே வேலை பார்க்கும் ஒருவித சுழல் ஏற்பட்டது.
இதனால் அவர்கள் சமீப காலமாக ‘சூத்திர, பஞ்சமர்கள்’ என்று கருதப்படும் பார்ப்பனரல்லாதோர் அதிக அளவில் அமெரிக்காவில் குடியேறுவதும், கொஞ்ச கொஞ்சமாக நாட்டில் நலிந்தவர்களுக்கு வழங்கப்படுகிற இட ஒதுக்கீட்டை போல் அமெரிக்காவில் இனச் சிறுபான்மை யினருக்கான இட ஒதுக்கீடான Affirmative action-அய் சாப்பிடுவதில் பார்ப்பனர்களுக்கு போட்டியாக பார்ப்பனரல்லாதோர் வந்து விட்டதும், அமெரிக்க அதிகார மய்யங்களில் கொஞ்சம் கொஞ்சமாக நுழைய ஆரம்பித்ததும் பார்ப்பனர்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கும். இவர்களை எப்படியாவது கட்டங்கட்டி அனுப்பி விட வேண்டும் என்றளவில் நம்ம ‘சூத்திரர்’களை அங்குள்ள வெள்ளையினத்தவர்களிடம் காட்டிக் கொடுக்கிறார்களோ என்று தோன்றுகிறது.