இது நுண்ணறிவுக்கும் கற்றலுக்கும் இடையிலான தொடர்பை வலியுறுத்துகிறது, மேலும் பள்ளிகள் மனித உணர்வுகளுடன் அறிவை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை இது எடுத்துக்காட்டுகிறது
டாவோசில் சமீபத்தில் முடிவடைந்த உலகப் பொருளாதார மாநாட்டின் முக்கிய கருப்பொருளாக விளங்கியது “புத்திசாலித்தன வயதிற்கு ஒத்துழைப்பு” என்பதாகும். குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் சூழலில் இதற்கு என்ன அர்த்தம்? மனிதநேயம், இயற்கை மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை இணைந்து செயல்படும் என்பது டாவோஸ் போன்ற ஒரு புகழ்பெற்ற தளத்தில் உறுதிப் படுத்தப்பட்டால் நாம் பள்ளிகளில் அதைப் பயன்படுத்தும்போது பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்க முடியும்.
மாணவர்கள் சவால்களை எதிர்கொள்ளலாம்
இன்று சமூகங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் எப்போதுமே எதிர்நோக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும். பள்ளிகளில் உள்ள கற்கும் முறைகள் மாணவர்கள் இந்த சவால்களைத் தீர்க்க உதவும். தங்களின் உயர்ந்த திறனைக் கண்டறிய அவர்களை வளர்க்கின்றனவா? பள்ளிகள் சமத்துவம், சுற்றுச்சூழல் அமைப்பைப் பற்றிய புரிதல், செயற்கை நுண்ணறிவு பற்றிய விழிப்புணர்வு மற்றும் செயல்படுத்தல் ஆகியவற்றை தழுவிச் செல்ல வேண்டும். இது எதிர்காலத்திற்கு தயார்படுத்திக் கொள்ளும் நிலை மற்றும் கல்வியறிவிக்கும் அப்பாற்பட்டது.
மனித உணர்வுகளோடு கல்வியில் ஒரு மாற்றம் செய்து புத்திசாலித்தனத்தையும் உணர்வுகளையும் இணைக்க வேண்டும். நுண்ணறிவு என்பது அறிவைப் பயன்படுத்தவும், சிக்கல்களைத் தீர்க்கவும், புதிய சூழ்நிலைகளைத் தழுவிச் செல்லவும் உதவும் திறன் ஆகும். இது பகுத்தறிவு, முடிவெடுத்தல் மற்றும் நினைவாற்றலையும் மேம்படுத்துகிறது; உண்மையில், இது செயற்கை மற்றும் மனித நுண்ணறிவு அமைப்புகளின் கலவையாகும். உணர்வுகள் மனிதர்களுடன் பிணைக்கப்பட்டுள்ள திறன் அறிதல், சுயபரிசோதனை, கற்பனை, உணர்ச்சிகள் மற்றும் புலனுணர்வுகளைக் கொண்டுவருகிறது.
பள்ளியில் மட்டுமே பயில முடியும்!
நுண்ணறிவுக்கும் கற்றலுக்கும் இடையிலான தொடர்பு மனித உணர்வுடன் இணைந்து இருப்பதை பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் குடியுரிமை, ஒருவரையொருவர் சார்ந்திருத்தல் மற்றும் பரஸ்பர நலன் பற்றிய பொதுவான புரிதலை நாம் உருவாக்க முடியும். இது ஒருங்கிணைக்கப்பட்ட சமூகங்களைக் உருவாக்கும், சமூக மற்றும் பொருளாதார நிறுவனங்களைக் கொண்டுவரும் மற்றும் உலகளாவிய மதிப்புகள் மற்றும் செயல்முறைகளை ஒருங்கிணைக்கும், இவற்றை பள்ளியில் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும்.
செயற்கை நுண்ணறிவு கல்வித் திட்டத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது, அதன் பிரதிபலிப்பு இன்னும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தாலும் இன்னும் தெளிவில்லாமலேயே உள்ளது. ஒரு தெளிவான விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு குழந்தைக்கும், இடம் அல்லது அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், சூழலுக்கேற்ப மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்ட கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கிடைக்க வேண்டும். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவத்தை கல்வியாளர்கள் எதிர்பார்த்தனர், ஆனால் பள்ளிகளில் அதன் உண்மையான தாக்கம் சாட்ஜி.பி.டி (ChatGPT) தொடங்கப்பட்டதன் பின்பே உணரப்பட்டது. வீட்டுப்பாடம், ஆய்வுக் கட்டுரைகள், திட்டங்கள், வழக்கு ஆய்வுகள் மற்றும் பிற கல்விப் பணிகளுக்கு ஆதரவாக இந்தக் கருவியைப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகளுக்காக மாணவர்கள் மிகுந்த உற்சாகத்தைக் காட்டினர். எந்த முயற்சியும் புரிதலும் இல்லாமல் அவர்களால் சமர்ப்பிப்புகளைச் செய்ய முடிந்தது. ஆனால் கல்வியாளர்களின் பதில் மெதுவாகவும் தயக்கமாகவும் உள்ளது, ஏனெனில் தொழில்நுட்பம் கற்கும் இடத்தில் பெரும் தாக்கங்களைக் கொண்டுள்ளது. ஆசிரியர்கள் குறிப்பாக செயற்கை நுண்ணறிவின் மாயத்தோற்றம் பற்றி பயப்படுகிறார்கள்.
மிகக் குறைந்த முயற்சி
கற்பித்தல் மற்றும் கற்றல், தொழில் சார்ந்த வளர்ச்சிக்கான அவர்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள், மாணவர்கள் எப்படிக் கற்கிறார்கள் என்பதைத் தீர்மானித்தல் மற்றும் அவர்களை உற்சாகப்படுத்தும் அல்லது தூண்டும் கற்கும் பொருள்களை கண்டறிதல் ஆகியவற்றுக்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்வதற்கும், பயன்படுத்துவதற்கும் ஆசிரியர்களுக்குத் தேவையான திறன்களை மறுமதிப்பீடு செய்வதற்கு மிகக் குறைந்த முயற்சியே செய்யப்பட்டுள்ளது என்பது யுனெஸ்கோவின் மதிப்புரைகளிலிருந்து தெளிவாகிறது. சுற்றியுள்ள சமூகத்துடன், குறிப்பாக பெற்றோர்கள் மற்றும் பிற அரசு நிறுவனங்களுடன் கூட்டு உறவுகளை வளர்த்து கல்வி பயிலும் ஒரு சூழலை நாம் உருவாக்க வேண்டும். இதற்காக நாம் சமூகங்களில் உள்ள கற்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், கல்வித் துறைக்கு அப்பாற்பட்ட பங்குதாரர்களுடன் ஈடுபட வேண்டும்.
உறுதியான முடிவுகள் எடுப்போம்!
மானுடவியலாளரும் எதிர்காலவாதியுமான ஜமைஸ் காசியோவினால் உருவாக்கப்பட்ட ஓர் உடையக்கூடிய, ஆர்வமுள்ள, நேரியல் அல்லாத மற்றும் புரிந்துகொள்ள முடியாத (BANI) எதிர்காலத்திற்கு மாணவர்கள் தயாராவதற்கு – பள்ளிகள் எந்தவொரு குறிப்பிட்ட கணிப்புக்கும் உறுதியளிக்காமல் காட்சித் திட்டமிடலைச் செய்ய வேண்டும். நாம் ஒரே நேரத்தில் பல எதிர்காலங்களை கற்பனை செய்ய வேண்டும். அனைத்தும் நம்பத்தகுந்ததாக இருக்கும். எந்த எதிர்காலம் வந்தாலும் உறுதியான முடிவுகளை எடுப்பதற்கு நம்மை நாமே தயார்படுத்திக் கொள்வோம்.
பள்ளிகளில் மாற்றத்தை நிலைநிறுத்துவதற்கான உண்மையான நம்பிக்கை மாணவர்களிடம் மட்டுமே உள்ளது. எந்த வயது முதிர்ந்தவருக்கும் இல்லாத வகையில் அவர்கள் எதிர்காலத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர், ஏனெனில் கலீல் ஜிப்ரான் சொல்வதுபோல், “அவர்களின் எண்ணங்கள் எதிர் காலத்தில் வாழ்கின்றன, அதை நீங்கள் (முதியவர்கள்) கனவில் கூட பார்க்க முடியாது.” கல்வியாளர்களாக நாம் முன்னேறும்போது, நம் பார்வையைத் தொடர்ந்து செம்மைப்படுத்தி, தொடர்ந்து மாறிவரும் யதார்த்தத்தைப் பற்றிய தெளிவான விழிப்புணர்வைப் பெறுவோம். கூட்டு நுண்ணறிவு மூலம் இயற்கையான கற்றல் செயல்முறையை மாற்றாமல், உதவக்கூடிய நிறுவனங்கள் மற்றும் நடைமுறைகளை நாம் உருவாக்க வேண்டும்.