அமெரிக்காவிலும் போய் நமது வரிப்பணம் வீணாகிறதா?
அமெரிக்கா மற்றும் இந்திய தொழிலதிபர்களின் கூட்டமைப்பு ஆங்கிலத்தில் UISPF US-India Strategic Partnership Forum என்று அழைக்கப்படும்.
இதில் உள்ள உறுப்பினர்கள். அதாவது போர்ட் மெம்பர்கள் அனைவருமே பார்ப்பன பனியாக்கள். ஒருவர் கூட சாமானிய இந்தியர்கள், அதாவது அமெரிக்காவில் பெரும் பதவிகளில் இருக்கும் உயர்ஜாதி அல்லாதவர்கள் கிடையாது.
அந்த அமைப்பு பெரும் பணத்தை செலவு செய்து ஒவ்வோரு முறையும் இந்தியாவிலிருந்து மோடி அமெரிக்கா செல்லும் போது விளம்பரம் கொடுக்கும்.
இது இவர்கள் பணம் என்று நாம் நினைத்தால் அதுதான் தவறு!
இதுவும் ஒரு வகையில் நமது வரிப்பணம் தான், காரணம் இவர்கள் மோடிக்கு கொடுக்கும் டாம்பீக மரியாதைக்குப் பதிலாக இவர்களுக்கு நமது மக்களின் வரிப்பணத்தில் பல்வேறு சலுகைகளை அள்ளித்தருகிறார்.
மோடி மட்டுமா அமெரிக்கா சென்றுள்ளார்? உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் அங்கு சென்றுள்ளனர். அவர்கள் யாருமே அமெரிக்க நாளிதழ்களில் இவ்வாறு முதல் பக்கத்தில் விளம்பரம் கொடுத்ததில்லை.
ஆனால் மோடியின் விருப்பத்தை நிறைவேற்ற அந்த அமைப்பு இவ்வாறு நாளிதழ்களில் விளம்பரம் செய்துள்ளது. அதுவும் பெரும் செலவு செய்து.
அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய பணமதிப்பு மிகவும் மோசமான கட்டத்தையும் தாண்டிச் சென்றுவிட்டது.
இதனை சரி செய்ய ரிசர்வங்கி கையிருப்பு பத்திரங்களையே வாங்கி சமாளிக்கவேண்டிய அவலத்தில் இருக்க – மோடி அமெரிக்க நாளிதழ்களில் டிரம்புடன் போஸ் கொடுத்து சிரிக்கிறார்.
அமெரிக்க அதிபரே இவ்வாறு நாளிதழ்களில் தங்களுடைய படத்தை முதல் பக்கம் விளம்பரமாக கொடுத்ததில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
உண்மை என்னவென்றால் ரோம் எரியும் போது, நீரோ பிடில் வாசித்ததுதான் இன்று நினைவிற்கு வருகிறது.