எலான் மஸ்கின் குடும்ப மேஜையில் மோடியின் அதிகாரப் பிரதிநிதிகள் அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்தியா போன்ற மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைமை அமைச்சர் பாதுகாப்பு, வணிகம் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ளார்.
உலகின் முதல் பணக்காரான எலான் மஸ்க் உடனான சந்திப்பு நடக்கிறது. மோடியோடு வெளியுறவுத்துறை அமைச்சர், பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுத்துறை செயலர், அமெரிக்காவிற்கான இந்தியத் தூதரக தலைமை அதிகாரி, உள்ளிட்ட மிகவும் உயர் பதவியில் முக்கிய முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட பதவியில் உள்ளவர்கள் அமர்ந்திருக்க எதிர் தரப்பில் எலான் மஸ்க் அவரது பிள்ளைகள் மற்றும் மனைவி, பிள்ளைகளை கவனித்துக்கொள்ளும் ஆயாவும் உட்கார்ந்திருக்கிறார்.
இது ஒருவகையில் ஒட்டுமொத்த இந்தியாவையும் எலான் மஸ்க் என்ன பார்வை பார்க்கிறார் என்பதைத்தானே எடுத்துக்காட்டுகிறது. இதை எப்படி மோடி அனுமதிக்கிறார்?