சென்னை ஜூலை 14 – “முதலமைச்சரின் முகவரி” துறையில் கடந்த 6 மாதத்தில் பெறப்பட்ட 3.42 லட்சம் மனுக்களில் 2.94 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள் ளது.
‘முதலமைச்சரின் முகவரி’ துறையின் செயல் பாடுகள் குறித்து தலை மைச் செயலகத்தில் முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
‘முதலமைச்சரின் முகவரி’ துறையில் பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவ டிக்கைகள், முதலமைச்சர் தனது சுற்றுப் பயணத் தின்போது பெற்ற மனுக் கள் மீதான நடவடிக் கைகள் குறித்தும் ஆய்வு நடத்தினார்.
கடந்த ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை பெறப் பட்ட 3.42 லட்சம் மனுக் களில் 2.94 லட்சம் மனுக்கள் அதாவது 86 சதவீதம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
தீர்வின் தன்மை குறித்து ஏ, பி மற்றும் சி என தரவரிசைப் படுத்தப் பட்டதன் மதிப்பீடுகளை யும் முதலமைச்சர் ஆய்வு செய்தார்.
முதலமைச்சரின் உதவி மய்யத்தின் இலவச அழைப்பு எண் ‘1100’ மூலமாக தொடர்பு கொள் பவர்களின் அழைப்பு களை ஏற்பது, கோரிக்கை களாக பதிவு செய்வது, ஏற்கெனவே பதிவு செய்த மனுவின் நிலவரம், மனு தாரர்களை தொடர்பு கொண்டு மனுக்களின் தரம் கண்காணிப்பு மற் றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள், மக்கள் நலத் திட்டங்கள் குறித்த சேவைகளின் மதிப்பீடு பெறுவது போன்ற பணி களும் நடைபெறுகின்றன.
ஆய்வின்போது, மனுதாரர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணப்பட்டதை உறுதிசெய்யும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் சில மனுதாரர்களை தொலைபேசி வாயி லாகத் தொடர்பு கொண்டு, அவர்களின் மனுக்கள் மீதான தீர்வு குறித்து கேட்டறிந்தார்.
தஞ்சாவூரைச் சேர்ந்த மனுதாரரின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச் சைக்கு ரூ.22 லட்சம் ஒப் புதல் அளிக்கப்பட்டு, கடந்த ஜூன் 19ஆ-ம் தேதி அறுவைச் சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது குறித்து அறிந்தார்.
அதேபோல், கன்னி யாகுமரி மாவட்டம் தோவாளையைச் சேர்ந்த மாணவி பட்டப்படிப்பு பயில கல்வி உதவித் தொகை ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டதையும் கேட்டறிந்தார்.
இதையடுத்து, மனுக்களை விரைவாக தீர்வு செய்த தருமபுரி, பென்னாகரம் வட்டாட் சியர் எச். சவுகத் அலி மற்றும் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ஜெ.ஜெயபால் ஆகி யோரை பாராட்டியும், சுணக்கமாக செயல்படும் அலுவலர்களுக்கு தக்க அறிவுரைகளையும் முதலமைச்சர் வழங்கினார்.
ஆய்வில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலை மைச் செயலர் சிவ்தாஸ் மீனா, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிர பாகர், வருவாய்த் துறை செயலர் குமார் ஜயந்த், டிஜிபி சங்கர் ஜிவால், நில நிர்வாக ஆணையர் எஸ். நாகராஜன், ‘முதல மைச்சரின் முகவரி’ துறை சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், செய்தித் துறை இயக்குநர் த.மோகன், முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலர் ஆர்.ராம்பிர தீபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.