இராணிப்பேட்டை,பிப்.14- இராணிப்பேட்டை – 7. 2.2025 அன்று காலை 8 மணிக்கு தொடங்கி, இரவு 8 மணி வரை, மாவட்டத்தில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன் தலைமையில், மாநில தலைமைச் செயற்குழு உறுப்பினர் பு.எல்லப்பன், மாவட்டத் தலைவர் சு.லோகநாதன், சிறப்பு அழைப்பாளர் சேலம் மாவட்டத் தலைவர் வீரமணி ராஜு ஆகியோர் கழகத் தோழர்களை வீடு, வீடாக சென்று சந்தித்து விடுதலை சந்தா சேர்த்தனர்.
இந்த நிகழ்வானது ஓச்சேரியில் தொடங்கி, அரக்கோணத்தில் முடிவு பெற்றது. TCOA நெமிலி ஒன்றிய தலைவர் சிறுகரும்பூர் பழனி அன்புடன் வரவேற்று, காலை சிற்றுண்டி வழங்கினார். மேலும், ஓராண்டு விடுதலை சந்தா வழங்கி மகிழ்ந்தார். ஓச்சேரி ஊராட்சி தலைவரின் தம்பி ஜெகன் விடுதலை ஓராண்டு சந்தா வழங்கினார். உத்திரம்பட்டு சுப்பிரமணி லிங்கநாதன் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார்கள். ஆலப்பாக்கத்தில் தோழர் இராவ ணனை சந்தித்தனர்.
தொடர்ந்து, பாணாவரம் தோழர் தணிகாசலம், விடுதலை ஓராண்டு சந்தாவும் வழங்கி மகிழ்ந்தார். இராணிப்பேட்டை மாவட்ட திமுக துணைச் செயலாளர் பாணாவரம் மஸ்தான் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார். மகேந்திரவாடி க.தீனதயாளன்- வேண்டா வாழ்விணையர், மகன் இளந்திரையன் குடும்பத்தினரை சந்தித்து உரையாடினர்.
அடுத்து, பெரப்பேரி சிங்கப்பூர் சங்கர்- பிரேமா (மகளிரணிச் செயலாளர்) வாழ்விணையர்கள் விடுதலை ஓராண்டு சந்தா வழங்கினர். நெமிலியில், மாவட்டத் தலைவர் சு. லோகநாதனின் இல்லத்திற்கு தோழர்கள் சென்றனர். மாவட்டத் தலைவர் சு.லோகநாதன்- மாவட்ட மகளிர் அணி தலைவர் லோ.செல்வி வாழ்விணையர்கள் தோழர்களை அன்புடன் வரவேற்று, பயனாடையாக லுங்கி அணிவித்து சிறப்பு செய்தனர்.
நெமிலி நகர வட்ட தி மு க செயலாளர் பசுபதி அவர்களை சந்தித்த்தனர். மேலும், நெமிலியில் GD சேனல் மேலாளர் இந்துமதி பெரியார் பிஞ்சு ஓராண்டு சந்தா வழங்கி மகிழ்ந்தார். தமிழர் தலைவர் மீதும், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மீதும் பெருமதிப்பும், அன்பும் கொண்டுள்ள ஜி.தாமோதரன் (MP TV தலைமை இயக்குனர், TCOA மாநிலத் துணைத் தலைவர்) எங்களை வரவேற்று, தேநீர் விருந்து அளித்து, நூல்களை பரிசளித்து, ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார்கள்.
தொடர்ந்து, அரக்கோணத்தில் மாநில தலைமை செயற்குழு உறுப் பினர் பு.எல்லப்பன் அவர்களின் இல்லத்திற்கு தோழர்கள் சென்றனர். பு. எல்லப்பன்- எ.புஷ்பா வாழ்விணை யர்கள் தோழர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பித்தனர். பின்னர் கழகக் காப்பாளர் சொ. ஜீவன் தாஸ் அவர்களை சந்தித்தனர்.
அரக்கோணம் நகர திமுக செய லாளர் வி. எல். ஜோதி தோழர்களை அன்புடன் வரவேற்று பயனடை அணிவித்து சிறப்பித்தார்.
அரக்கோணம் நகர்மன்ற தலைவர் இலட்சுமி பாரி தோழர் களை அன்புடன் வரவேற்று உபசரித் தார். அரக்கோணம் நகர்மன்ற துணைத் தலைவர் கலாவதி- அன்பு லாரன்ஸ் வாழ்விணையர்கள் தோழர்களை அன்புடன் வரவேற்று உபசரித்தனர். நல்லாசிரியர் விருது பெற்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் சு. பாண்டியன் தோழர்களை வர வேற்று ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார்கள்.
இரவு 8 மணி அளவில் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம் இனிதே முடிவடைந்தது. இந்த சுற்றுப் பயணத்தில் கலந்து கொண்டு, ஒத்துழைப்பு வழங்கிய சேலம் மாவட்டத் தலைவர் வீரமணி ராஜுவுக்கு இராணிப்பேட்டை மாவட்ட கழகம் சார்பாக நன்றி தெரிவித்துக் கொண்டனர். கழகத் தோழர்கள், மற்றும் திமுக தோழர்களின் வரவேற்பும், ஆதரவும் தோழர்களுக்கு பெருமகிழ்ச்சியை அளித்தது.
இரண்டு கட்ட சுற்றுப்பயணம் முடிந்தும், இன்னும் தோழர்களை சந்திக்க வேண்டியிருப்பதால், சிதம்பரம் பொதுக்குழுவிற்கு பிறகு, மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன் தலைமையில், மேலும் சுற்றுப்பயணம் தொடர உள்ளது.