தமிழ்நாடு மீன்வளக் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பில் முதல் மாணவியாக தேர்ச்சிப்பெற்ற நாகை ஜெ.அய்ஸ்வர்யாவை சந்தித்து மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் மு.க.ஜீவா, நாகை நகர கழகத் தலைவர் தெ.செந்தில்குமார், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் சிறீ.ப்ரதீப் ஆகியோர் சென்று வாழ்த்தினர்.
விடுதலை சந்தா
திண்டுக்கல் மாவட்ட தலைவர் இரா. வீரபாண்டியன் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜுடம் அவர்களிடம் விடுதலை ஆண்டு சந்தா ரூ.2000/- வழங்கினார். மாநில தொழிலாளரணி செய லாளர் மு. சேகர் உடனிருந்தார்.