குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர்கள் பதவிக்கு மார்ச் 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

2 Min Read

சென்னை, பிப்.13 தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் தலைவர், உறுப்பினர்கள் பதவிக்கு விண் ணப்பிக்க தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு தலைவர் மற்றும் 6 உறுப்பினர்கள் பதவிக்கான நியமனம் தொடர்பாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகுதி விவரங்கள் https://www.tn.gov.in/dept_profile.php?dep_id=MzA= (Social Welfare and Women Empowerment Department) என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மார்ச் 20ஆம் தேதிக்குள்

தகுதி வாய்ந்தவர்கள், சம்பந்தப்பட்ட பதவிகளுக்குரிய படிவத்தில் புகைப்படத்துடன், செயலர், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், எண்.183/1, ஈ.வே.ரா. பெரியார் நெடுஞ் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10 என்ற முகவரிக்கு மார்ச் 20-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் வந்து சேரும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிக்கு தனித்தனியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வந்து சேராத விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இதுகுறித்து அரசின் முடிவே இறுதியானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தனியார் மூலம் இயக்கும் வகையில்
600 தாழ்தள மின்சார பேருந்துகளுக்கு டெண்டர் வெளியீடு

சென்னை, பிப்.13 சென்னையில் தனியார் மூலம் இயக்கும் வகையில் 600 மின்சார தாழ்தள பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட டெண்டர் அறிவிப்பில் கூறியிருப்ப தாவது: மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 600 தாழ்தள மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. இதனை தயாரித்து வழங்குவதோடு, பராமரித்து இயக்க கூட்டு ஒப்பந்த அடிப்படையில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. இதற்கு விருப்பமுள்ள நிறுவனங்கள் இணையவழியில் ஏப்.3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

அதன்படி, 400 குளிர் சாதன வசதிப் பேருந்துகளும், 200 குளிர்சாதன வசதியில்லா பேருந்துகளும் தயாரித்து வழங்க வேண்டும். இதில் நடத்துநர்கள் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் நியமிக்கப்படுவர். இதர பணிகளை டெண்டரில் தேர்வாகும் நிறுவனம் கவனித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *