திருவாரூர் மாவட்டம் திருநெய்ப்பேர் பெரியார் பெருந்தொண்டர் வா.கோவிந்தராஜுவின் வாழ்விணையர் கோ.நாகரெத்தினம் அம்மையாரின் 7ஆம் ஆண்டு நினைவு நாளை (12.02.2025) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.3,000 அவர்களது குடும்பத்தினர் சார்பாக நன்கொடையாக அளிக்கப்பட்டது.
– – – – –
சாத்தூர் அ.செல்வம் மறைவு
சாத்தூர் நகர மேனாள் திராவிடர் கழகச் செயலாளர் அ.செல்வம் (வயது68) உடல்நலக் குறைவு காரணமாக 10.02.2025 திங்கள் அதிகாலை 4 மணியளவில் இறுதி எய்தினார். இராசை மாவட்ட ப.க. தலைவரும், சாத்தூர் நகர்மன்றத் துணைத் தலைவருமான பா.அசோக், விருதுநகர் மாவட்ட கழக. செயலாளர் விடுதலை தி.ஆதவன், இளைஞரணித் தலைவர் இரா.அழகர், சாத்தூர் நகர்மன்றத் தலைவரும், நகர தி.மு.க. செயலாளருமான ச.குருசாமி மற்றும் தி.மு.க. பொறுப்பாளர்கள் தோழமை இயக்க நண்பர்கள் அன்னாரது இல்லம் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். இரவு 7 மணியளவில் இறுதி நிகழ்வு நடைபெற்றது.