சென்னை, பிப். 12- இந்தியாவின் மிகப் பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சி 2025 பிப்ரவரி 13 – 15 தேதிகளில் சென்னை வர்த்தக மய்யத்தில், நந்தம்பாக்கத்தில் நடைபெறவுள்ளது.
நிபுணர்களுடன் நேரடி சந்திப்பு
இதில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் சமீபத்திய தொழில்நுட்பங்கள், நிலையான தீர்வுகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை தொழில்துறைகள் ஆய்வு செய்யக் கூடிய மேடை உருவாக்கப்படும்.
அறிவுப்பகிர்வு அமர்வுகள், தொழில்நுட்ப விவரிப்புகள், குழு விவாதங்கள் மற்றும் நிபுணர்களுடன் நேரடி சந்திப்பு போன்ற வாய்ப்புகள் வழங்கப்படும்.
இக்கண்காட்சி, புதுமையான தொழில் நுட்பங்களை அறிந்து கொள்ள, புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆய்வு செய்ய, மற்றும் தொழில் வளர்ச்சிக்கான ஒரு சிறந்த தளமாக விளங்கும்.
தொழில்நுட்ப மன்றங்கள், தொழில்துறை விவாதங்கள், மற்றும் நிபுணர்களுடன் நேரடியாக சந்திக்கும் வாய்ப்புகள் போன்றவை இதில் இடம்பெறும்.
மின் வாகன பேட்டரி
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சார வாகன தொழில்நுட்ப வளர்ச்சியை ஒருங்கிணைப்பதற்காக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சி உடன் மின் வாகன பேட்டரி கண் காட்சி 2025 இணைந்து நடத்தப்பட உள்ளது.
இந்த கண்காட்சியில் புதிய கண்டுபிடிப்புகள், சூரிய, காற்று, ஹைட்ரஜன், மற்றும் மின்திறன் சேமிப்பு தொழில்நுட்பங்கள், வணிக வாய்ப்புகள, 150+ முன்னணி நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் இணைய வாய்ப்பு, தொழில்துறை நிபுணர் களுடன் கலந்தாய்வு போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
இந்தியா, தூய்மையான மற்றும் நிலையான ஆற்றல் எதிர்காலத்திற்காக முன்னேறிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சி ,புதுமை மற்றும் கூட்டாண்மையை ஊக்குவிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக திகழ்கிறது.