திருச்சி, பிப். 10 1.2.2025 அன்று பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 2024-2025ஆம் கல்வியாண்டில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு 11ஆம் வகுப்பு மாணவிகள் பிரியாவிடையளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் வீ.அன்புராஜ் அவர்களின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதலோடு தலைமையாசிரியை சு.பாக்கியலட்சுமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு 11ஆம் வகுப்பு மாணவி ஆ.கா.நிஷாந்தி வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார். பின்பு மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியை மற்றும் இருபால் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
12ஆம் வகுப்பு மாணவிகள் இப்பள்ளியில் தாங்கள் பயின்ற அனுபவங்களை சிறப்பாக பதிவு செய்தனர். தாங்கள் இப்பள்ளியில் கல்வியுடன் தன்னம்பிக்கை, பகுத்தறிவு, எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் ஆகிய வற்றை கற்று நாங்கள் சிறந்த மாணவிகளாக செல்வதற்கு இப்பள்ளியே காரணம் என்பதை பதிவு செய்தனர்.
நினைவுப்பரிசுடன் கூடிய சிற்றுண்டி வழங்கப்பட்டு பின்பு மாணவிகளுக்கு ஆ.சிராஜ் நிஷா நன்றி கூறினார்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் பொருளியல் ஆசிரியை D.விக்டோரியாதேவி தலைமையில் 11ஆம் வகுப்பு மாணவிகள் ஏற்று நடத்தினர்.