ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் இல்லம் தோறும் தோழர்கள் சந்திப்பு நிகழ்வு 27.1.2025 திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்கு பாதி மாவட்டம் முடிந்தது. மாவட்ட தலைவர் சு.லோகநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் பு.எல்லப்பன், மாவட்ட செயலாளர் செ.கோபி, ப.க. மாவட்ட செயலாளர் ந.இராமு,மாவட்ட துணைத் தலைவர் பொன். வெங்கடேசன், தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளர் இரா.தமிழ்வாணன், ஆகியோர் உடன் சென்றனர். மேனாள் மாவட்ட தலைவர் பொ.பெருமாள், சிப்காட் ராஜா, தோழர். வசந்தம் இராமலிங்கம், மாற்றுத் திறனாளிகள் – சிறந்த ஆசிரியர்கள் முகிலன், இணையர் யாழினி, மாவட்ட ப.க.தலைவர் த.க.பா.புகழேந்தி, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா ஜெ. அசேன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் காவேரிப்பாக்கம் போ.பாண்டுரங்கன் ஆகியோரை சந்தித்து மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் பயனாடை அணிவித்தார்.