மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் இன்று (10.02.2025) சென்னை, வேளச்சேரி, அரசு மேல்நிலைப்பள்ளியில் “தேசிய குடற்புழு நீக்க நாள்” நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.ப்ரியா, வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர்அசன் மவுலானா, துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் உயரலுவலர்கள் உடனிருந்தனர்.