இது பெரியார் மண் என்பதை ஈரோடு தேர்தல் நிரூபித்து விட்டது! வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் முகநூல் பதிவு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஈரோடு, பிப். 9- ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, “இது பெரியார் மண்.. இது திராவிட மண்” என முகநூலில் பதிவிட்டுள்ளார் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து திமுக வேப்டாளர் வி.சி.சந்திர குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவின் வெற்றியை முதலமைச்சருக்கு சமர்ப்பிக்கிறேன். மேலும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், இடைத்தேர்தலில் என்னை வழிநடத்தி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஃபார் முலாவை உருவாக்கிய அமைச்சர் முத்துசாமி உட்பட அனைவருக்கும் நன்றி.

மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி. எவ்வளவு அவதூறு கருத்துகளை பரப்பினாலும் இறுதியில் திமுகவே வென்றுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக வென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார்” என்று தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர் தலுக்கு முன்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பர பரப்பை ஏற்படுத்தியது. சீமானுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங் களில் போராட்டங்கள் நடத்தப் பட்டன.

ஈரோட்டைச் சேர்ந்த பெரியார் பற்றி சீமான் பேசியது கொதிப்பை ஏற்படுத்தி இருந்ததால், ஈரோட்டில் சீமானுக்கு எதிர்ப்புகளும் எழுந்தன. இந்நிலையில் தான், திமுகவின் வெற்றிக்குப் பிறகு, “இது பெரியார் மண்” எனப் பதிவிட்டுள்ளார் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *