ஆந்திர மாநிலம் – விஜயவாடாவில் உள்ள நாத்திகர் மய்யத்தின் செயல்பாட்டாளர் டாக்டர் மாரு (வயது 80) உடல் நலம் குன்றியிருந்த நிலையில் நேற்று முன்தினம் (6.2.2025) நள்ளிரவில் காலமானார்.
ஆந்திர நாத்திக அறிஞர் கோரா – சரஸ்வதி கோரா ஆகியோரின் மகள் டாக்டர் மாரு, நாத்திகர் மய்யத்தின் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வந்தவர். குழந்தைப் பேறு மருத்துவரான மாரு, நாத்திகர் மய்யத்தின் மருத் துவம் சார்ந்த களப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.
தமிழர் தலைவர் அவர்கள்மீது அன்பும், கொள்கை சார்ந்த பற்றும் கொண்டவர். நாத்திகர் மய்யத்திற்குத் தமிழர் தலைவர் செல்லும் நேரங்களில், விருந்தோம்புவதில் தனி அக்கறை நல்குபவராக இருந்தார்.
அவருடைய மறைவு நாத்திகர் மய்யத்திற்குப் பேரிழப்பாகும்.
டாக்டர் மாரு அவர்களின் மறைவுச் செய்தி குறித்து தமிழர் தலைவர் இரங்கல் செய்தியினை அனுப்பியுள்ளார். நாத்திகர் மய்யத்தின் தலைவர் டாக்டர் கோ. சமரம் அவர்களுக்கும், மாரு அவர்களின் வாழ்விணையர் ஹரி சுப்ரமணியம் அவர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துள்ளார்.