முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளர்ச்சி மந்தம்

viduthalai
0 Min Read

கடந்த டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 4 சதவீதமாக மந்தமடைந்துள்ளது. இதுகுறித்து அரசின் புள்ளிவிவரங்கள் கூறுவதாவது: நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், உரம், உருக்கு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளர்ச்சி கடந்த டிசம்பர் மாதத்தில் 4 சதவீதமாக உள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் அது 5.1 சதவீதமாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளா்ச்சி வீழ்ச்சியடைந்துள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *