18.11.2023 சனிக்கிழமை
தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 5:30 மணி ⭐ இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர் ⭐ தலைமை: சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்) ⭐ முன்னிலை: வெ.ஜெயராமன் (காப்பாளர்), மு.அய்யனார் (காப்பாளர்), க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்), முனைவர் அதிரடி அன்பழகன் (கிராமப் பிரச்சார மாநில அமைப்பாளர்) ⭐கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) ⭐ பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, விடுதலை சந்தா, பிரச்சாரப் பணிகள் ⭐ வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, வழக்குரைஞரணி, மகளிரணி, இளைஞரணி, மாணவர் கழகம், தொழிலாளரணி, மாநில, மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர பொறுப்பாளர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம்.⭐ அழைப்பு: அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) ⭐ ஏற்பாடு: தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகம்.
19.11.2023 ஞாயிற்றுக்கிழமை
மண விழா
எண்ணூர்: காலை 8:30 – 9:30 மணி⭐ இடம்: மாதா கோயில் (சூசையப்பர்) திருமண மண்டபம், எண்ணூர், சென்னை-57 ⭐ வரவேற்புரை: எஸ்.முருகையன் (குத்தாலம் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர்) ⭐ தலைமை: இரா.முத்தரசன் (மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) ⭐ திருமணத்தை நடத்தி வைப்பவர்: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) ⭐ வாழ்த்துரை: கே.பி.சங்கர் (திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.), ஆர்.டி.சேகர் (பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.), நா.பெரியசாமி (மாநிலத் துணை செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), மு.வீரபாண்டியன் (மாநில துணை செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) ⭐ அனைவரையும் இனிதே வரவேற்கும்: சி.கே.பிரிதிவிராஜ் – கற்பகம் (விடுதலை நாளிதழ், சென்னை)