ஆண்டிமடம்,பிப்.6- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் தியாக. முருகனின் மாமனாரும் கலா அவர்களின் தந்தை யுமான ஓய்வுபெற்ற தலைமைக் காவலர் கு.இராமநாதன் மறை வுற்றார்.
செய்தியறிந்த கழகப் பொறுப்பாளர்கள் 2.2.2025 அன்று காலை 11 மணியளவில் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் தலைமையில் தலைமை செயற்குழு உறுப்பினர் க. சிந்தனைச் செல்வன் பொதுக்குழு உறுப்பினர் சி காமராஜ் , ராஜா. அசோகன்,மாவட்டத் துணைத் தலைவர் இரா.திலீபன் மாவட்டத் துணைச் செயலாளர் கார்த்திக், மாவட்ட இளை ஞரணி பொறுப்பாளர் க.செந்தில், மாவட்ட வழக்குரைஞரணி அமைப் பாளர் மு.ராஜா, தா.பழூர் ஒன்றிய அமைப்பாளர் சி.தமிழ் சேகரன், ஆண்டி மடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன், ஒன்றிய அமைப்பாளர் கோ.பாண்டியன், நகர அமைப்பாளர் டைல்ஸ் பட்டுசாமி ஆகியோர் அவரது இல்லம் சென்று மறைந்த இராமநாதன் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செய்தனர். முன்னதாக
ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கலியபெருமான், ரெங்க முருகன் முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் டேவிட் உள்ளிட்டவர்களும் உறவினர்களும் இறுதி மரியாதை செய்தனர்.