ஒடசல்பட்டி, பிப். 6- கடந்த 1.2.2025 அன்று மாலை 4 மணிக்கு தருமபுரி மாவட்டம் ஒடசல்பட்டி கூட்ரோட்டில் கழக பொதுக்கூட்டம் மாவட்ட கழக செயலாளர் பீம.தமிழ் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் கு.சரவணன், ப.க தலைவர் கதிர்.செந்தில்குமார், ப.க மாவட்ட செயலாளர் இர.கிருஷ்ணமூர்த்தி, ப.க மாவட்ட அமைப்பாளர் தி.அன்பரசு, மாநில இளைஞரணி துணை செயலாளர் மா.செல்லதுரை, மாவட்ட துணைத் தலைவர் இளைய.மாதன் முன்னிலை வகித்தனர்.
மாநில கலைத் துறை செயலாளர் மாரி.கருணாநிதி, மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் சிறப்பானதொரு தொடக்கவுரையாற்றினார்கள்.
பா.மணியம்மை சிறப்புரை
தி.மு.கழக கடத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், அக்ரி இளங்கோ (திமுக), விசிக ஒன்றிய செயலாளர் த.குமரன் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இறுதியாக மாநில மகளிரணி செயலாளர் பொறியாளர் தகடூர்.தமிழ்செல்வி மற்றும் சிறப்புரையாக மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்கறிஞர் பா. மணியம்மை, அய்யாவின் கொள்கை பற்றியும், ஆசிரியரின் வழிகாட்டுதல்களையும், வைக்கம் வெற்றி முழக்கம் பற்றியும், திராவிட மாடல் அரசின் வரலாற்று சாதனைகள் பற்றியும் விரிவானதொரு உரையாற்றினார்.
இக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்பித்தோர்:
பொதுக்குழு உறுப்பினர் க.கதிர், விடுதலை வாசகர் வட்ட தலைவர் க.சின்னராசு, சுந்தரம், மகளிர் கழக பாசறை செயலாளர் பெ.கோகிலா, மாவட்ட தொழிலாளரணி தலைவர் மு.சிசுபாலன், செயலாளர் பெ.மாணிக்கம், தி.சிவாஜி ப.க மாவட்ட செயலாளர்(அரூர்), முருகேசன் ப.க, கி.தவமணி.
தி.மு.க தோழர்கள்
அ.நந்த குமார், கணபதி, சிவா, முனியப்பன், மதி மற்றும் பிரசாந்த், குணசீலன், நரேஷ்குமார் மற்றும் மாணவர் கழகம் நாத்திகன், கர்நாடகா மாநில பொறுப்பாளர் அ. ராஜா, மாணவர் கழக கலையரசி, ஜீவிதா ப.க.,
ஒன்றிய இளைஞரணி தலைவர் ப.ரகுநாத் நன்றியுரையாற்றினார்.