சென்னை, ஜூலை 15– 2022–2023 ஆண் டுக்கான ‘ஊரகக் கண்டுபிடிப்பாளர் விருது’க்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அறிவியல் நகரம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
அறிவியல் நகரம் 2018–2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசின் ஊரக கண்டுபிடிப்பாளர் விருதை வழங்கி வருகிறது. இந்த விருது ஊரக மக்களின் அறிவுத் திறனை ஊக்குவித்து பல பயனுள்ள புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணரும் விதத்தில் இரண்டு சிறந்த ஊரகக் கண்டுபிடிப்பாளர்களுக்கு தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
2022–2023ஆம் ஆண்டுக்கான ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின் றன.
விண்ணப்பங்கள் மற்றும் விதி முறைகளை அறிவியல் நகர இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள் ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக அறிவியல் நகரத்துக்கு ஆகஸ்ட் 30-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் வந்து சேரவண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.