அமெரிக்காவில் குடியேறும் பார்ப்பனீயம்!

2 Min Read

பொதுவாக மேலை நாடுகளில் வசிக்கும் பார்ப்பனர்கள் மிகவும் மெத்தப் படித்தவர்கள் என்று தான் அவர்களே சொல்லிக் கொள்வார்கள்.
இருப்பினும் தங்களின் கலாச்சாரம் என்ற பெயரில் இங்கிருந்து புராண இதிகாச கதைகளை கதாகலாட்சேபம் என்ற பெயரில் உளறும் பார்ப்பனர்களை அவ்வப்போது அழைத்து பேசச் சொல்லி குடும்பத்தோடு அமர்ந்து ரசிப்பார்கள்.
அப்படித்தான் அமெரிக்காவில் நிவேடா மாகாணத்தில் உள்ள வின்னமுக்கா என்ற நகரில் வசிக்கும் பார்ப்பனக் குடும்பங்கள் பெங்களூருவில் இருந்து பார்ப்பனரை அழைத்து வந்து கதாகாலட்சேபம் செய்ய வைத்தனர்.
‘‘சந்திரனுக்கும், ரோகிணிக்கும் பிறந்தவர் புதன், புதன் தனது தாயைப் போன்றே மனைவி வேண்டும் என்று நாரதரிடம் கேட்டார். நாரதரோ தாயைப்போன்று மனைவி எப்படி நீ கேட்கலாம் என்று வாசுதேவரிடம் புதன் குறித்து கோள் சொன்னார்’’ என்று நாரதர் பேசும் உரையாடல் அக்காலட்சேபத்தில் உள்ளது
சிறீமத் பாகவதம் 1.6.1 முதல் 38 ஸ்லோகங்கள் வரை இவ்வாறு கூறுவதாக அந்த உச்சிக்குடுமி பாகவதர் அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டு பேசுகிறார். இதை ஒட்டு மொத்த மெத்தப் படித்த பார்ப்பனக் கூட்டமும் எந்த ஒரு மறுப்பும் இன்றி ரசித்துக் கேட்டுக் கொண்டே இருக்கிறது என்பது செய்தி!

1. புதன் கோள்
2. ரோகிணி சூரியனைவிட 48 மடங்கு பெரிய விண்மீன்
3. சந்திரன் பூமியின் துணைக்கோள்
புதன் என்பது பூமியைப் போன்றே பெரிய ஒரு கோள்; அந்தக் கோளின் சுழற்சி மாற்றத்தால் சூரிய ஒளி நேரடியாக புதனின் தரையை அடைய இதனால் வெப்பம் வெளியேறவழியில்லாமல் புதன் கோளே வெப்பக் கோளமாக மாறிவிட்டது, அதனை ஆய்வு செய்ய அய்ரோப்பிய மற்றும் அமெரிக்காவிலிருந்து விண்வெளி ஆய்வுக்கலன்கள் அனுப்பப்பட்டு இன்றளவும் ஆய்வு செய்துகொண்டுள்ளனர்.
ரோகிணி என்ற விண்மீன் கூட்டத்தில் உள்ள மிகவும் பெரிய ஒளிமிக்க விண்மீன் ஆகும். இது சூரியனைவிட பல மடங்கு பெரிய விண்மீனுமாகும்.
சந்திரன் என்பதோ பூமியின் துணைக்கோள்.
இவை எல்லாம் அறிவியல் கண்டுபிடித்த அரிய தகவல்களாகும்.

உண்மைகள் இவ்வாறு இருக்க, ‘‘நிலாவில் பாட்டி வடை சுடுகிறாள்’’ என்பது போன்ற கற்காலப் புராணப் புனை சுருட்டுகளை ஆன்மிக சொற்பொழிவுகள் என்ற பெயரால் இந்த 2025இலும் கதாகாலட்சேபம் நடத்துவது எத்தகைய காட்டு விலங்காண்டித்தனம்!
குரு பத்தினியைக் கற்பழித்தான் சந்திரன், குருவின் சாபத்தால்தான் தேய்பிறை ஏற்படுகிறது. ராகு, கேது என்ற பாம்புகள் சந்திரனை விழுங்குகின்றன – என்பதுதானே புராணக் குப்பை.
சந்திரனுக்கும், ரோகிணிக்கும் உள்ள தொலைவு என்ன? இரண்டும் இணைந்து பிள்ளை பெற்றுக் கொண்டனர் என்பது எல்லாம் எத்தகைய ஆபாசம்!

எதை எடுத்தாலும் உடல் உறவு – பிள்ளைப் பேறு என்பதைத் தாண்டி இவர்கள் வருவதில்லை.
மெத்த படித்து, அமெரிக்காவில் குடியேறி, இந்தியாவிலிருந்து பார்ப்பனப் பிரசங்கிகளை அழைத்து, அருவருக்கத்தக்க உபந்நியா சங்களை நடத்தச் சொல்லி ரசிக்கிறார்கள் என்பது எத்தகைய கேவலம்!
பார்ப்பனர் எங்கு சென்றாலும் மூடத் தனத்தைப் பரப்பச் செய்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் – மூடத்தனம்தான் அவர் களின் மூலதனம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *