கேள்வி: பாரதி கண்ட புதுமைப் பெண் ஆசிரியர் பார்வையில் தற்போது உள்ளார்களா?
பதில்: எனக்குத் தெரிந்த சமுதாயத்தில், ஏன் வீடு களில்கூட பலர் இருக்கிறார்கள். ஆனால், பாரதியார் கூறிய புதுமைப் பெண் யாரையும் அரசியலில் நான் பார்க்கவில்லை.
– ‘துக்ளக்’, 22.1.2025, பக்கம் 28
பெண்களில் 30 சதவிகிதம் பேர் பெண்மை தன்மையுடையவர்களல்ல என்று கூறி, வாங்கிக் கட்டிக் கொண்டவராயிற்றே திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள்.
குருமூர்த்தியின் ஆசானாகிய ‘சோ’ ராமசாமி, என்ன எழுதினார்?
கேள்வி: பெண்களைப்பற்றி உங்களுக்கு உண்மை யான அபிப்ராயம்தான் என்ன?
பதில்: உயர்ந்தவர்கள், அப்படி இருக்க விருப்பம் இல்லாதவர்கள்.
– ‘துக்ளக்’, 18.3.2009
கேள்வி: பெண்களெல்லாம் இப்போது ஊழலில் ஈடுபடுவதுபற்றி…
பதில்: ஆணும், பெண்ணும் சமம் என்கிற பெண்ணு ரிமை வாதத்தை ஏற்ற பிறகு, ஆண் ஊழல், பெண் ஊழல் என்று எப்படிப் பார்க்கலாம்?
– ‘துக்ளக்’, 9.4.2020, பக்கம் 23
இவ்வளவையும் எழுதியது ‘துக்ளக்’தான்.
‘அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி’ என்ற மகா பாரதத்தைத் தலையில் தூக்கி வைத்து ஆடும் கூட்டம்தான் இதுகள்!