கூர்நோக்கு இல்லங்கள் குறித்த நீதிபதி சந்துரு அறிக்கையின் பரிந்துரைகள் நீதிபதிக்கு முதலமைச்சர் நன்றி

2 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை, நவ. 15-  கூர்நோக்கு இல்லங்கள் தொடர்பான 500 பக்க அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி சந்துரு குழு அளித்தது. இத்தகைய இல்லங் களை குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான தனி இயக்குநரகத் தின்கீழ் கொண்டுவர வேண்டும். 

அனைத்து கூர்நோக்கு இல்லங் களிலும் முழுநேர மனநல ஆலோச கரை நியமிக்க வேண்டும் என்று அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பரிந்துரைகள்

சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகள், சிறப்பு இல்லங்கள், பாதுகாப்பு இல்லங்களுக்கான புதிய விதிகளை உருவாக்கி, கடந்த 2021இ-ல் சட் டத் திருத்தம் கொண்டுவந்து, 2022இ-ல் குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. 

இந்த விதிகளை அமல்படுத்த வேண்டும். இல்லங்களை பதிவு செய்தல், அங்கீகரித்தல் குறித்த விதிகளை மறுஆய்வு செய்து, உரிய திருத்தங்கள் செய்ய வேண்டும்.

சமூக பாதுகாப்பு இயக்குநரகம் பிரிக்கப்பட்டு, கூர்நோக்கு இல்லங் களை குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான தனி இயக்குநரகத் தின்கீழ் கொண்டுவர வேண்டும். இதற்காக இயக்குநர் தலைமையில் புதிதாக சிறப்பு சேவைகள் துறையை உருவாக்க வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க வேண்டும்.

மாவட்டத்துக்கு குறைந்த பட் சம் ஓர் இல்லமாவது இருக்க வேண்டும். இல்லங்களை நாள் தோறும் கண்காணிக்க வேண்டும். அனைத்து கூர்நோக்கு இல்லங்களி லும் முழுநேர மனநல ஆலோச கரை நியமிக்க வேண்டும். 

இல்லங்கள் சிறைபோல இருக் கக் கூடாது. அவற்றின் அமைப்பு மாற்றப்பட்டு புதிய கட்டடவியல் தன்மையுடன் அமைக்க வேண்டும். இல்லங்களில் சிறுவர்கள் 24 மணி நேரமும் அடைத்து வைக்கப்படக் கூடாது.

சிறுவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்க வேண்டும். தூங்குவதற்கு மெத்தை, தலையணையுடன் கட் டில் வழங்க வேண்டும். நவீன கழிப் பறைகள், துணி துவைக்க இயந் திரம், கொசு விரட்டி உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும். 13-16 வயதினரை ஒரு குழுவாக, அதற்கு மேல் உள்ளவர்களை ஒரு குழுவாக அடைக்க வேண்டும்.

இல்லங்களில் உள்ள மாஸ்டர் கள் தகுதியான ஆசிரியர்களாக இருக்க வேண்டும். இல்லங்களில் கண்காணிப்பாளர்கள் தவிர, உதவி கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டு, அவர்கள் அங் கேயே தங்கியிருக்க வேண்டும். 

சமையலர்கள், துப்புரவுப் பணி யாளர்களை காலநிலை ஊதியத் தில் நிரந்தரமாக நியமிக்க வேண் டும். இவ்வாறு அவர் பரிந்துரை செய்துள்ளார்.

முதலமைச்சர் நன்றி

இதனிடையே அறிக்கை பெற் றது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவு:

கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள், பாதுகாப்பு இல்லங் கள் ஆகியவற்றின் செயல்பாட் டையும் நிர்வாகத்திறனையும் மேம்படுத்த, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒருநபர் குழுவின் அறிக்கையை குழந்தைகள் நாளில் பெற்றுக் கொண்டேன்.

சமூக நலத்துறை அதிகாரிகளு டன் கலந்தாய்வு செய்து, அறிக் கையின் பரிந்துரைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். மதிப்பூதியம் ஏதும் பெற்றுக் கொள் ளாமல் குழந்தைகள் நலனுக்காக இப்பணியை ஏற்றுக் கொண்டு அறிக்கை அளித்த நீதிபதி 

சந்துருவுக்கு நெஞ்சார்ந்த நன் றியை பதிவு செய்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *