தந்தை பெரியாரை அவமதிப்பதா? சமூக வலைதளத்தில் மனோதங்கராஜ் பதிவு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அண்ணாவைப் போற்றுவது, பெரியாரைப் பழிப்பது; பிரச்சினையிலிருந்து தப்பிக்க முயற்சியா? இல்லை தான் ஒரு முரண்பாட்டாளர் அல்லது தனக்கே எதிரானவன் (one who contradicts himself) என்பதை நிரூபிப்பதா?
1934இல் திருப்பூர் மாநாட்டில் பெரியாரின் பேச்சை கேட்டு ஈரக்கப்பட்டவர் அண்ணா.
தந்தை பெரியாரின் ‘குடியரசு’ ‘விடுதலை’ நாளிதளுக்கு துணை ஆசிரியராக பணியாற்றியவர்.
கடவுள் மறுப்பு, புராண எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு, சமதர்மம், பகுத்தறிவு வளர்ப்பு எனப் பெரியாரின் கொள்கைகளை முழங்கிய பெரியாரின் பிரச்சாரகர்.

ஹிந்தி எதிர்ப்புப் போரை தளபதியாக நின்று அண்ணாவை வழிநடத்த சொன்னவர் பெரியார்.
பெரியார் நீதிக் கட்சியின் தலைவராக இருந்த போது, பொதுச்செயலாளராக அண்ணாவை நியமித்தார்.
1944 ‘திராவிடர் கழகம்’ பெயர் மாற்ற தீர்மானத்தை முன்மொழிந்தவர் அண்ணா. முன் மொழியச் சொன்னவர் பெரியார்.
திமுக கழகம் பிரிந்திருந்தாலும் இதன் தலைவர் பொறுப்பு என்றைக்கும் பெரியாருக்கானது என்று அறிவித்தவர் அண்ணா.
1967இல் திமுக ஆட்சி – இந்த ஆட்சி பெரியாருக்கு காணிக்கை என்றவர் அண்ணா.

பெரியாரின் சுயமரியாதைத் திருமண சட்டம்  இருமொழிக் கொள்கை
தமிழ்நாடு பெயர் மாற்றம்

என்று முத்தான மூன்று சட்டத்தை கொடுத்தவர் திராவிட அண்ணா.

“பெரியார் ஒரு சகாப்தம். பெரியார் ஒரு திருப்புமுனை. பெரியார் ஒரு காலக்கட்டம். என்று தன் அனுபவத்தால் சொன்னவர். “என்னுடைய வாழ்நாளிலே ஒரு தலைவரைத்தான் கண்டேன். ஒரே ஒரு தலைவரைத்தான் கொண்டேன். அவர்தாம் பெரியார்” என்றார் அண்ணா.
“என் வாழ்நாளில் வசந்த காலம் என்றால் அது தந்தை பெரியரோடு இருந்த காலம் தான் ” என்று சொன்னவர் அண்ணா.
அரசியலில் மாற்றுக் கருத்து கொண்டு இயங்கி இருந்தாலும், பெரியாரையும் அண்ணாவையும் வேறுபடுத்திப் பார்ப்பது வரலாற்றோடு முரண்படும் போக்கு. யார் யாரையோ கொண்டு வந்து பெரியாருக்குப் போட்டியாக நிறுத்தலாமா? தமிழ் மக்கள் மத்தியில் செல்லாக்காசு ஆன நிலையில், இன்று பெரியாரையும், திராவிட கருத்தியலையும் விமர்சித்து, அண்ணாவைப் பாராட்டுவது போலவும் போலவும் நாடகமாடுவதை உலக தமிழர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

“பகைவன் பாவி படுகுழி தோண்டுவான்” என்ற பழமொழிக்குச் சான்றாய் பெரியாரை வெறுத்தும், அண்ணாவை அரவணைத்தும் பேசும் இந்த பசப்பு சொல்லுக்கு தமிழினம் மயங்காது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *